பிரசவத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பாரா பாரதி கண்ணம்மா ‘வெண்பா’ ஃபரீனா? – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
பிரசவத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பாரா பாரதி கண்ணம்மா 'வெண்பா' ஃபரீனா? - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரசவத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பாரா பாரதி கண்ணம்மா 'வெண்பா' ஃபரீனா? - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரசவத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பாரா பாரதி கண்ணம்மா ‘வெண்பா’ ஃபரீனா? – ரசிகர்கள் அதிர்ச்சி!

பாரதி கண்ணம்மா தொடரின் மூலமாக வில்லியாக மக்கள் மனதில் பதிந்துள்ள நடிகை ஃபரீனாவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர் சீரியலில் தொடர்ந்து நடிக்க மாட்டார் என்ற தகவல் பரவி வருகிறது. இது குறித்து ஃபரீனா அளித்துள்ள விளக்கம் பற்றி இந்த பதிவில் காண்போம்.

பாரதி கண்ணம்மா வெண்பா:

பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பாவாக நடித்து, தனது வில்லத்தனமான நடிப்பால் மக்கள் மனதில் பதிந்து விட்டவர் ஃபரீனா. இவர் முன்னதாக தொகுப்பாளராக பல முன்னணி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி வந்தார். அதன் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர், இந்த வெண்பா கதாபாத்திரம் மூலமாக சின்னத்திரையில் தவிர்க்க முடியாத நடிகையாகி விட்டார். தான் காதலிக்கும் நண்பன் தனது தோழியை காதலிப்பதை அறிந்து அவர்களை கொன்று விடும் அளவிற்கு முயற்சிக்கும் வில்லி கதாபாத்திரம்.

“பாரதி கண்ணம்மா” வெண்பாவின் கர்ப்பகால நெகட்டிவ் கமெண்ட்ஸ் – பதிலடி கொடுத்தவருக்கு நன்றி!

அதன்பிறகு, காதலன் விபத்தில் இருந்து உயிர் தப்பி விட மற்ற யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாத அளவிற்கு அவரை குழப்பி விடுகிறார். அதையும் மீறி பாரதி, கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டதை பொறுக்க முடியாமல் அவர்கள் வாழ்க்கையில் பல குழப்பங்களை ஏற்படுத்துகிறார். இப்படி சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடித்து வருகிறார். இந்நிலையில் ஃபரீனா நிஜத்தில் கர்ப்பமாக இருந்தார். தொடர்ந்து அந்த நிலையிலும், சீரியலில் நடித்து வந்தார். பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் ஓய்வெடுக்க இருப்பதாக படப்பிடிப்பிற்கு செல்வதை நிறுத்தினார்.

TRP ரேட்டிங்கில் புதிய சாதனை நிகழ்த்திய சன் டிவி ‘கயல்’ சீரியல் – வெற்றிக் களிப்பில் குழுவினர்! ரசிகர்கள் வாழ்த்து!

கடந்த சில நாட்களுக்கு முன் ஃபரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஃபரீனா தொடர்ந்து சீரியலில் நடிக்க போவதில்லை என்று பல தகவல்கள் வெளிவந்தது. ஆனால், ஃபரீனா தனது சமூக வலைதள பக்கத்தில், ” உங்களுடைய அன்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றி. நானும் குழந்தையும் நலமுடன் இருக்கிறோம். இது ஒரு சுகப்பிரசவம், நான் விரைவில் திரும்பி வருவேன்”என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பாவை விரைவில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!