பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து வெளியேறியுள்ள ‘வெண்பா’ ஃபரீனா – அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள்!

0
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து வெளியேறியுள்ள 'வெண்பா' ஃபரீனா - அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள்!
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து வெளியேறியுள்ள 'வெண்பா' ஃபரீனா - அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள்!
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து வெளியேறியுள்ள ‘வெண்பா’ ஃபரீனா – அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள்!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வரும் ஃபரீனா தனது பிரசவ காலம் காரணமாக சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதற்காக தான் கதையின் போக்கு மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெண்பா விலகல்:

பாரதி கண்ணம்மா தொடர் என்றதும் நம் நினைவுக்கு வரும் முகங்களில் முதல் இடத்தில் இருப்பது வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபரீனா தான். இந்த தொடரின் மூலம் கதாநாயகன் மற்றும் கதாநாயகி அடைந்துள்ள வெற்றி மற்றும் புகழை ஓரம் கடும் அளவிற்கு ஃபரீனா புகழடைந்துள்ளார். வில்லத்தனம் பெரிய அளவில் இருந்தால் தான் கதாநாயகியின் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில் கண்ணம்மா வெற்றி அடைய காரணம் வெண்பா தான். அந்த அளவிற்கு ஃபரீனா பாரதி கண்ணம்மா தொடரில் வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார்.

சன் டிவி ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான்? முடிவுக்கு வரும் ஷோ!

ஃபரீனா தனது நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனால் விதவிதமாக கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலமும் சர்ச்சையில் சிக்கி கொண்டார். தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த அவர், மாதம் அதிகரிக்க தொடங்கியதும் வயிறு வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது. இதனால் தொடரில் இருந்து விலகுவதாக இயக்குனரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு ஃபரீனா தான் மிக சரியாக இருப்பதாகவும், வேறு யாரும் இவர் அளவிற்கு சரியாக இருக்க மாட்டார்கள் என்றும், நான் பாத்துக்கிறேன், நீங்க போங்க என கேஷ்வலாக சொல்லி விட்டார். அதனால், இப்போதைக்கு சீரியலில் இருந்து விலக மாட்டேன் என தெரிவித்திருந்தார்.

நடிகர் ரஜினியின் “அண்ணாத்த” திரைப்படம் ரூ.200 கோடி வசூல்? உண்மை நிலவரம் என்ன?

இந்நிலையில், தற்போது பிரசவத்திற்கான காலம் நெருங்கி விட்டதால் கண்டிப்பாக ஃபரீனாவிற்கு ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலக இருக்கிறாராம். அதற்காக தான், வெண்பா சிறையில் இருப்பது போல் காட்சிகள் வருவதாகவும், சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ய முயன்ற குற்றத்திற்காக சிறிது நாட்கள் அவர் சிறையில் இருப்பதாக கதையை மாற்றி, அவர் பிரசவ நாட்களை சமாளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக தொடரில் வெண்பாவின் வேலைக்கார பெண்ணாக நடிக்கும் புஷ்பா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ‘மிஸ் யூ ஃபரீனா’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் கண்டிப்பாக ஃபரீனா தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்று கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து அடுத்து வரும் காட்சிகளில் அதிக மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!