சீமந்த நிகழ்வில் நெகிழ்ச்சியான ‘பாரதி கண்ணம்மா’ பரினா – வைரலாகும் வீடியோ!

0
சீமந்த நிகழ்வில் நெகிழ்ச்சியான 'பாரதி கண்ணம்மா' பரினா - வைரலாகும் வீடியோ!
சீமந்த நிகழ்வில் நெகிழ்ச்சியான 'பாரதி கண்ணம்மா' பரினா - வைரலாகும் வீடியோ!
சீமந்த நிகழ்வில் நெகிழ்ச்சியான ‘பாரதி கண்ணம்மா’ பரினா – வைரலாகும் வீடியோ!

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினாவுக்கு சமீபத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது நண்பர்கள், பரினாவுடனான கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தவாறு ஒரு காணொளி வெளியாகியுள்ளது.

பரினா நெகிழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாரதி கண்ணம்மா’ தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்னதாக ஒளிபரப்பான எபிசோடுகள் வரை லட்சுமியின் அம்மா கண்ணம்மா என்ற உண்மை பாரதிக்கு தெரிய வருகிறது. அதே போல பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் ஆகவில்லை என்ற உண்மையும் கண்ணம்மாவுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஹேமா யாருடைய குழந்தை என்ற கேள்வி கண்ணம்மாவுக்கு எழ, அதற்கான விடைகளுடன் வரும் வார கதைக்களம் ஒளிபரப்பாக இருக்கிறது.

“பாரதி கண்ணம்மா” வெண்பாவின் வித்தியாசமான கர்ப்பகால போட்டோஷூட் – ரசிகர்கள் வாழ்த்து!

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் வெண்பா என்ற கதாப்பாத்திரத்தில் மோசமான வில்லியாக நடித்து வருபவர் நடிகை பரினா. நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் நடிகை பரினாவுக்கு வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் ‘பாரதி கண்ணம்மா’ நடிகர், நடிகைகள் உட்பட பலரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வெண்பா வெளியிட்ட வீடியோ!

அப்போது, படப்பிடிப்பு தளத்தில் பரினாவுடன் செலவழித்த நேரங்கள், நிகழ்வுகளை ரோஷினி, ஸ்வீட்டி, அருண் ஆகியோர் பகிர்ந்து கொள்ள அவரது முகத்தில் புன்னகை பூத்தது. இதை தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர், பரினாவின் குழந்தைக்காக ஒரு மோதிரம் வைத்திருப்பதாக கூற அதைக்கேட்டு அவர் கண்கலங்கியவாறு உள்ள ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த காணொளியை பார்த்து ரசித்தவர்கள் நடிகை பரினாவுக்கு தங்களது ஆறுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!