அகிலன், அஞ்சலி என கலகலப்புடன் நடந்த வெண்பா வளைகாப்பு விழா – வைரலாகும் வீடியோ!

0
அகிலன், அஞ்சலி என கலகலப்புடன் நடந்த வெண்பா வளைகாப்பு விழா - வைரலாகும் வீடியோ!
அகிலன், அஞ்சலி என கலகலப்புடன் நடந்த வெண்பா வளைகாப்பு விழா - வைரலாகும் வீடியோ!
அகிலன், அஞ்சலி என கலகலப்புடன் நடந்த வெண்பா வளைகாப்பு விழா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை பரீனா. அவர் தற்போது மாசமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பாரதி கண்ணம்மா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அதில் கலகலப்பாக படபிடிப்பு தள நிகழ்வுகளை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

வெண்பா வளைகாப்பு:

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வில்லியாக நடிப்பவர் பரீனா. இவரை பரீனா என சொல்வதை விட வெண்பா என சொன்னால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவு இந்த சீரியலில் அவர் கதாபாத்திரத்தில் மூழ்கி உள்ளார். இந்நிலையில் அவர் தற்போது நிஜ வாழ்க்கையில் மாசமாக இருக்கிறார். அவரது கணவர் சர்ப்ரைஸாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார். அதில் அவரது நண்பர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாரதி கண்ணம்மா நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

ஹேமா ஏன் என் பொண்ணா இருக்க கூடாது? கண்ணம்மா நினைக்கும் காரணங்கள்!

அதில் பேசிய அகில், இவர் மாசமானதில் இருந்து ஸ்வீடியும் இவரும் ஒரே ரூமில் தான் இருப்பார்கள். இவருக்கு தேவையான எல்லா வேலையும் இந்த பொண்ணு தான் பார்ப்பார் என சொல்கிறார். அப்போது ஸ்வீடி மைக் வாங்கி ஒரு உயிர் இல்லை, நான் இரண்டு உயிர் என சொல்லியே வேலை வாங்குவாள் என சொல்கிறார். அதை கேட்ட வெண்பாவின் கணவர் உங்களுக்கு சிறிது நேரமே இப்படி இருக்கே நான் வீட்டில் என்னவெல்லாம் கஷ்டப்படுவேன் என கேட்கிறார்.

சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – இன்றைய எபிசோட் ப்ரோமோ!

அதன் பின்னர் பாரதி, கண்ணம்மாவிற்கு வரும் முதல் குழந்தை இது. அதனால் நாங்க சந்தோசமாக இருக்கிறோம் என சொல்கிறார். அதன் பின்னர் அகில் அஞ்சலி சேர்ந்து வெண்பாவிற்கு நலுங்கு வைத்து வளையல் போடுகின்றனர். அனைவரும் சீரியலில் அடித்துக் கொண்டாலும் நிஜத்தில் ஒற்றுமையாக இருப்பது ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. ரசிகர்கள் பரீனாவிற்கு விரைவில் நலமுடன் குழந்தை பிறக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!