‘பாரதி கண்ணம்மா’ பரினா கர்ப்ப காலத்தில் ஆபத்தான முறையில் போட்டோஷூட் – குவியும் லைக்ஸ்!

0
'பாரதி கண்ணம்மா' பரினா கர்ப்ப காலத்தில் ஆபத்தான முறையில் போட்டோஷூட் - குவியும் லைக்ஸ்!
'பாரதி கண்ணம்மா' பரினா கர்ப்ப காலத்தில் ஆபத்தான முறையில் போட்டோஷூட் - குவியும் லைக்ஸ்!
‘பாரதி கண்ணம்மா’ பரினா கர்ப்ப காலத்தில் ஆபத்தான முறையில் போட்டோஷூட் – குவியும் லைக்ஸ்!

விஜய் டிவியின் “பாரதி கண்ணம்மா” சீரியலின் மூலமாக பிரபலமடைந்தவர் தான் நடிகை பரீனா. தற்போது ஒரு வித்தியாசமான போட்டோஷூட் ஒன்றினை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பரீனா அசாத்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து பிரபலமடைபவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையில் சாதித்து வருகின்றனர். இதன் காரணமாக சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு என்று தனி மவுசு உள்ளது. அந்த வகையில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பாரதி கண்ணம்மா”. இந்த சீரியல் தெலுங்கு சீரியலான “கார்த்திகை தீபம்” தமிழ் ரீமேக் ஆகும். இதில் அழகான வில்லியாக நடித்து வருபவர் தான், நடிகை பரீனா அசாத். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ரோஜாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாரதி கண்ணம்மா – கடந்த வார TRP ரேட்டிங்!

அதன் பின்பு இவருக்கு “பாரதி கண்ணம்மா” சீரியலில் இவர் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடித்தார். எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் பரீனா கர்ப்பமாக இருக்கிறார். அதன் காரணமாக பல வித விதமான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியும் வருகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ பிரபலங்கள் சூழ வளைகாப்பு நிகழ்ச்சி – ஆனந்த கண்ணீரில் பரீனா!

இவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலர் அவருக்கு கர்ப்ப காலத்தில் இது போன்று நடந்து கொள்ள கூடாது என்று கூறினாலும், எதையுமே பரீனா காதில் போட்டு கொள்ளவில்லை. தனது போக்கில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது குதிரையுடன் இருப்பது போலவும், பீச் அருகில் இருப்பது போலவும் ஒரு ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!