பிக்பாஸ் ஒரு “toxic ஷோ”, கொந்தளித்த நடிகை கஸ்தூரி – வைரலாகும் பதிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
பிக்பாஸ் ஒரு
பிக்பாஸ் ஒரு "toxic ஷோ", கொந்தளித்த நடிகை கஸ்தூரி - வைரலாகும் பதிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக்பாஸ் ஒரு “toxic ஷோ”, கொந்தளித்த நடிகை கஸ்தூரி – வைரலாகும் பதிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ” பிக்பாஸ் அல்டிமேட்” என்ற புதிய சீசன் தொடங்கப்பட்டுள்ளது. அதில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி வருவது குறித்து அவரே ரசிகர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.

நடிகை கஸ்தூரி:

தமிழ் சின்னத்திரையில் புதிதாக ஒரு சர்வதேச ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் சீசன் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் அடுத்ததடுத்த சீசன்களுக்கு மக்களின் ஆதரவு பெருகியது. மேலும் பிக் பாஸ் வீட்டில் சிறிய சின்னத்திரை நடிகர்கள் முதல் பல புகழ் பெற்ற நடிகர்கள் வரை கலந்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த மாதம் முடிவடைந்தது. அதில் சின்னத்திரை நடிகர் ராஜு டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

TN Job “FB  Group” Join Now

அதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுகிழமை முதல் பிக்பாஸ் அல்டிமேட் தொடங்கப்பட்டது. அதில் இதுவரை ஐந்து சீசன்களில் கலந்து கொண்டு சுவாரசியம் அதிகமாக இருந்த போட்டியாளர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் வனிதா, அனிதா, ஜூலி, சுஜா, பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி, தாமரை, நிரூப், அபிநய், அபிராமி, சுருதி, சினேகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். முதல் சீசனில் கலக்கிய ஓவியா வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் அவர் கடைசி நேரத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு தொடரும் – பிப்ரவரி 3 முதல் புதிய தளர்வுகள் அமல்!

அவர் மற்றும் பாரதி வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் வனிதாவின் ராஜ்ஜியம் நடந்த போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக போன நடிகை கஸ்தூரி ஏன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் எனக்கு குடும்ப இருக்கு, வேலை இருக்கிறது. இந்த toxic ஷோவுக்கு வர நேரம் இல்லை. குறிப்பாக இந்த fake ஷோ டிவி பின்னால் paymentக்காக ஓட முடியாது. உங்கள் எதிர்பார்ப்பை வேறு எங்காவது கொண்டு செல்லுங்கள்” என கோவமாக பதில் அளித்து இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here