விஜே சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் – சோகத்தில் ரசிகர்கள்!!

0
விஜே சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் - சோகத்தில் ரசிகர்கள்!!
விஜே சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் - சோகத்தில் ரசிகர்கள்!!
விஜே சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் – சோகத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை சித்ரா இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. சித்து இல்லாமல் ஒரு வருஷம் ஆகிருச்சு என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நடிகை சித்ரா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதிருக்கு ஜோடியாக முல்லை கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சித்ரா ரசிகர்களால் சித்து என்று அழைக்கப்படுவார். இவர் திரைத்துறைக்கு வரும் போது ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் நிறைய விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். முல்லை – கதிர் இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் நடிகை சுஜிதாவின் சொந்த ஊர் விசிட் – வைரலாகும் வீடியோ!

நடிகை சித்ராவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாவில் லட்சக்கணக்கான பாலோவர்ஸ் உள்ளனர். இந்த நிலையில் நடிகை சித்ரா கடந்த 2020 ஆண்டு டிசம்பர் 9ம் தேதி இரவு தான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களும், திரை பிரபலங்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதளங்களில் சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

மின் பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மின் வாரியம் அதிரடி!!

தற்போது நடிகை சித்ரா இறந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகியுள்ளது. இதனையடுத்து சித்ராவின் நண்பர்களும், சின்னத்திரை நடிகை , நடிகைகளும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் மிஸ் யூ சித்ரா என்று இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சித்ரா இல்லாமல் ஒரு வருடம் ஆகிருச்சு என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!