விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் களமிறங்கும் சஞ்சீவ் & ஆலியா ஜோடி – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'சரவணன் மீனாட்சி' சீரியலில் களமிறங்கும் சஞ்சீவ் & ஆலியா ஜோடி - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
விஜய் டிவி 'சரவணன் மீனாட்சி' சீரியலில் களமிறங்கும் சஞ்சீவ் & ஆலியா ஜோடி - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் களமிறங்கும் சஞ்சீவ் & ஆலியா ஜோடி – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது புதிய கதைக்களத்துடன் பல சீரியல்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. இருப்பினும் பல வருடங்களாக 3 சீசன்களை கடந்து மக்கள் மனதில் இடம் பிடித்த சீரியல் சரவணன் மீனாட்சி. இன்று வரை ரசிகர்களால் அதிகம் பேசப்படும் சீரியல் இதுவே. இந்நிலையில் இந்த சீரியலின் 4 வது சீசன் தொடங்க உள்ளதாகவும், அதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

சரவணன் மீனாட்சி சீசன் 4:

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல். இதில் சரவணனனாக நடித்த ஆர் ஜே.செந்தில், ஸ்ரீஜா இருவரும் சூப்பர் ஜோடி. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு இப்போது செட்டில் ஆகி விட்டனர். இந்த சீசனின் வெற்றியை தொடர்ந்து, சீசன் 2 தொடங்கப்பட்டது. இதில் சரவணன் மற்றும் மீனாட்சியின் மகன் சக்தி சரவணன் கனடாவிலிருந்து தனது குடும்ப உறுப்பினரை சந்திக்க வருகிறார் அங்கு தனது தாய் மாமன் தமிழின் மகளான தங்க மீனாட்சியை பார்த்ததும் காதல் செய்கிறார்.

TN Job “FB  Group” Join Now

நாட்கள் போக போக இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதே தருணம் மீனாட்சியை காதலிக்கும் முறை பையன் சரவண பெருமாள், இந்த முக்கோண காதல் கதையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தங்க மீனாட்சி சரவண பெருமாளை திருமணம் செய்கிறார். திருமணத்திற்கு பிறகு இவர்களின் திருமண வாழ்க்கை பல பிரச்சனைகளுடன் எப்படி செல்கின்றது என்பது தான் கதை. இந்த சீசனும் மாபெரும் வெற்றியை தழுவியது. இதை தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவை பெற இந்த தொடரின் 3வது சீசன் தொடங்கப்பட்டது. அதில் ரக்ஷிதா, ரியோ, சரவணன் மீனாட்சியாக நடித்தனர். இந்த தொடரின் கதை காதல், குடும்பம், பேய், பழிவாங்குதல், திகில் போன்ற பல கதை அம்சங்களை கொண்டு இருந்தது.

எழில் அம்ரிதாவை காதலிக்கும் விஷயத்தை வீட்டில் போட்டு கொடுக்கும் செழியன் – ப்ரோமோ ரிலீஸ்!

இந்நிலையில் சரவணன் மீனாட்சி தொடரின் சீசன் 4 தொடங்க உள்ளதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த தொடரில் சஞ்சீவ் – ஆலியா மனசா ஜோடி சரவணன் – மீனாட்சியாக நடிக்க உள்ளார்களாம். சில மாதங்களுக்கு முன்புதான், தனது பிரசவத்திற்காக ராஜா ராணி 2 வில் இருந்து ஆலியா விலகினார். இந்நிலையில் இந்த சரவணன் மீனாட்சி சீரியலில் ஆலியா கமிட் ஆகிய உள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இணையத்தில் சரவணன் மீனாட்சி சீசன் 4 ப்ரோமாவை பார்த்து ரசிகர்கள், “நாங்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளோம்” என கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த சீரியல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!