‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் காதலியுடன் களமிறங்கும் புகழ்? ஸ்பெஷல் எபிசோடு! ரசிகர்கள் உற்சாகம்!

0
'குக் வித் கோமாளி' சீசன் 3 நிகழ்ச்சியில் காதலியுடன் களமிறங்கும் புகழ்? ஸ்பெஷல் எபிசோடு! ரசிகர்கள் உற்சாகம்!
'குக் வித் கோமாளி' சீசன் 3 நிகழ்ச்சியில் காதலியுடன் களமிறங்கும் புகழ்? ஸ்பெஷல் எபிசோடு! ரசிகர்கள் உற்சாகம்!
‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் காதலியுடன் களமிறங்கும் புகழ்? ஸ்பெஷல் எபிசோடு! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியின் ஆஸ்தான கோமாளியான புகழ், வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலியுடன் ஒரு ஸ்பெஷல் எபிசோடில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் புகழ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

குக் வித் கோமாளி புகழ்

மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘குக் வித் கோமாளி’ தற்போது 3வது சீசனுக்குள் அடியெடுத்து வைத்து இருக்கிறது. வழக்கம் போல ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டிய ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியின் லான்ச் எபிசோடு மக்களின் வரவேற்புகளை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சீசன் 3க்கான புதிய கோமாளிகளாக சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன், அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், ஸ்ருத்திகா, வித்யூலேகா, அந்தோணி தாஸ், தர்ஷன், சந்தோஷ், ராகுல் தாத்தா, மனோபாலா உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு கோமாளிகளாக 10 பேர் நிகழ்ச்சியில் இடம்பிடித்துள்ளனர். அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 துவக்க எபிசோடில் மனோபாலா – ஷிவாங்கி, ரோஷினி – குரேஷி, அந்தோணி தாஸ் – பரத் ஆகிய ஜோடிகள் ரசிகர்களின் கவனம் பெற்றிருந்தது. மேலும் கோமாளிகளின் அறிமுகத்தில் வழக்கம் போல பாலா தனது நகைச்சுவையால் ஒட்டுமொத்த செட்டையும் சிரிக்க வைக்க, மணிமேகலை தன் பங்குக்கு சூனியம் வைக்க என கலகலப்பாக வெளியாகி இருந்தது முதல் 2 எபிசோடுகள்.

தமிழகத்தில் 2000க்கு மேலாக அதிகரிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகள் – கொரோனா பரவல் எதிரொலி!

இருந்தாலும், மக்கள் எதிர்பார்த்திருந்த புகழின் நகைச்சுவை ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் மிஸ் ஆகி இருந்தது. இதனால் புகழ் எப்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் திரைப்படங்களில் பிசியாக இருந்து வரும் புகழ், விரைவில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் கலந்து கொள்ளுவார் என்றும், இம்முறை அவர் சில ஸ்பெஷல் எபிசோடுகளில் மட்டுமே கோமாளியாக இடம்பிடிப்பார் என்றும் சில சமூக வலைதள தகவல்கள் கூறுகிறது.

என்றாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வரவிருக்கும் பிப்ரவரி 14ம் தேதியான காதலர் தினத்தன்று புகழ் ‘குக் வித் கோமாளி’ ஷோவில் கலந்து கொள்வார் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது, வழக்கம் போல காதலர் தின சிறப்பு எபிசோடு ‘குக் வித் கோமாளி’ ஷோவில் இடம்பிடிக்கும் என்றும், அதில் புகழ் தனது காதலி ரியாவுடன் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த தகவல் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here