ENG vs IND 3வது டெஸ்ட் – 100வது விக்கெட்டை வீழ்த்துவாரா பும்ராஹ்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
ENG vs IND 3வது டெஸ்ட் - 100வது விக்கெட்டை வீழ்த்துவாரா பும்ராஹ்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ENG vs IND 3வது டெஸ்ட் - 100வது விக்கெட்டை வீழ்த்துவாரா பும்ராஹ்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ENG vs IND 3வது டெஸ்ட் – 100வது விக்கெட்டை வீழ்த்துவாரா பும்ராஹ்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ள இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராஹ் 100 என்ற இலக்கை அடைவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

டெஸ்ட் தொடர்:

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் தொடர் நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகளும் மோதிய முதல் போட்டி டிரா ஆனதை தொடர்ந்து, 2வது போட்டியானது லார்ட்ஸில் நடைபெற்றது. இந்த போட்டியில் பும்ராஹ் – ஷமி ஆகியோர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக பங்காற்றியதால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

புதுச்சேரியில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு? அரசுக்கு கோரிக்கை!

இந்த வெற்றியை தொடர்ந்து மூன்றாவது போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராஹ் இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அவரது இந்த சாதனையை பும்ராஹ் முறியடிப்பாரா? என்ற ஆர்வம் ரசிகர்களிடையே காணப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில் பும்ராஹ் 5 விக்கெட்டுகளை எடுத்து விட்டால், குறைந்த டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைப்பார். ஏற்கனவே மனோஜ் பிரபாகர், வெங்கடேஷ் பிரசாத் சாதனைகளை பும்ராஹ் முறியடித்த நிலையில் கபில்தேவ் அவர்களின் சாதனையும் முறியடிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடந்து முடிந்த 2 போட்டிகளில் மொத்தம் 14 விக்கெட்டுகளை பும்ராஹ் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!