ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0
ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் - உற்சாகத்தில் ரசிகர்கள்!!
ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் - உற்சாகத்தில் ரசிகர்கள்!!
ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அவர் தற்போது சின்னத்திரையில் இருந்து விலகிய நிலையில் அவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் முன்னணி சீரியல் ஒன்றில் சிறப்பு ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை வனிதா:

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பின் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை வனிதா விஜயகுமார். அவர் அந்த நிகழ்ச்சியில் அனைவரிடமும் சண்டை போட்டு சர்ச்சைகளை கிளப்பினார். பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து பல சர்ச்சைகளில் சிக்கினார். அதற்கு காரணம் அவர் ஏற்கனவே திருமணமானவர். இந்த பஞ்சாயத்து லட்சுமி ராமகிருஷ்ணன் வரை சென்று வாக்குவாதமாக ஏற்பட்டது.

விஜய் டிவியின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ வில்லி நடிகை பரினா – வைரலாகும் புகைப்படம்!

அதன் பின் அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பவர் ஸ்டாருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்திலும், பவர்ஸ்டாருக்கு ஜோடியாக பிக் அப் ட்ராப் படத்திலும் நடித்து வருகிறார். விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரான அவர் அதன் பின் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனாலும் அதிலும் அவருடைய வாய் சும்மா இருக்கவில்லை.

தமிழகத்தில் டிச.19 வரை மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கான எச்சரிக்கை – வானிலை அறிக்கை!

தற்போது பல படங்களில் நடித்து பிசியாக இருக்கும் அவர் சின்னத்திரையில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் சில சீரியல்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து நடிப்பார். ஏற்கனவே, சந்திரலேகா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.இந்நிலையில் மீண்டும் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் நடிகை வனிதா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் திருமதி ஹிட்லர் சீரியலில் வனிதா சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!