“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “ரோஜா” சீரியல் வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" முதல் "ரோஜா" சீரியல் வரை - ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “ரோஜா” சீரியல் வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோக்கள் வெளியான நிலையில் அதில் ரசிகர்களின் கமெண்ட்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

தமிழ் சீரியல்கள்:

தமிழ் சின்னத்திரையில் காலை முதல் இரவு வரை பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக வயதானவர்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி இளசுகளை தன் வசம் இழுக்க தேவையான கதைகளையும் ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் 30 நிமிட சீரியல்களை விட இன்றைய எபிசோட் குறித்த 30 வினாடி ப்ரோமோவிற்கு காத்திருக்கும் ரசிகர்கள் அதிகம். மேலும் சமூக வலைத்தளங்களில் தொலைக்காட்சி நிறுவனங்களில் பக்கத்தில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோக்களில் ரசிகர்கள் பதிவிடும் கருத்து ரசிக்கும் தன்மையுடன் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனை நினைத்து கவலைப்பட்டு லட்சுமி அம்மாவிற்கு உடம்பு முடியாமல் போய்விட்டது. இதை நினைத்து தனம் கவலைப்படுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இதே சீன் இன்னும் எத்தனை நாளைக்கு ஓட்டுவீங்க கதைக்கு வாங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தனத்துக்கு வீட்ல இருக்க எல்லார் மேலயும் பாசம் அதிகம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் லஷ்மி அம்மாவுக்கு கண்ணன பார்க்க பிடிக்கல ஆன அவன நெனச்சி சாப்பிடாம இருப்பாங்க என்ன இது என்று கேட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியின் வளைகாப்பிற்கு வந்த கண்ணம்மாவிடம் பாரதி தான் அப்பா என்று தெரியுமா என பாக்கியா கேட்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பரவாயில்லை கண்ணம்மா சித்தி இப்படி மாறிட்டாங்களே என்று பதிவிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை, கதிர் ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சிகள் – இன்றைய எபிசோட்!

மற்றொரு ரசிகர் லக்ஷ்மி அப்பா பாரதி தான் அப்படினு அவளுக்கு மட்டும்தான் தெரியாது மற்ற எல்லாருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார். எல்லாரும் ஒன்னாதான் இருக்கீங்க இப்போ அந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுப்போமா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த கதையெ இன்னும் 10 வருஷத்திற்கு ஓட்டுவீங்களா என்று கேட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவுக்கு வாங்கிய சேலையை பாக்கியா பார்த்ததால் உனக்கு வாங்கியது என கோபி சொல்லிவிடுகிறார். இதனால் ராதிகாவுக்கு அதே போல சேலை வாங்க செல்கிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியான நிலையில் அதை பார்த்த ரசிகர். வீட்டுக்கு தெரியாமல் தப்பு பண்ற எல்லாருக்கும் இப்படிதான் நடக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி நல்லவரா கெட்டவரா? காமெடியும் பண்றாரு சீரியஸாவும் நடிக்கிறாரே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதற்கு பேசாம வீட்டில உண்மைய சொல்லிட்டு வேற வேலைய பாத்துக்கிட்டு போகலாம் என்று கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் , போலி போலீசாரை பிடித்துக் கொடுத்த சந்தியாவை அழைத்து கமிஷனர் பாராட்டுவது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ரொம்ப ஓவரா இருக்கு கதைய விட்டுவிட்டு ஏதேதோ பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கூறியுள்ளார். போலி போலிச கண்டுபிடிச்சதுக்கு பாராட்டு விழாவா நடத்துங்க என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர்:

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஒவ்வொரு குடும்பத்திலேயும் இப்படி ஒரு கேரக்டர் இருக்கத்தான் செய்யுது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மாயன் தான் உங்களுக்கு ஆதரவா இருக்காரே அப்புறம் என்ன என்று கேட்டுள்ளார்

ரோஜா

ரோஜா சீரியலில் அனுவை பழிவாங்க பிச்சைக்காரர்களை அழைத்து சாப்பாடு போடா சொல்கிறார் அர்ஜுன். நன்றாக சாப்பிட்டுவிட்டு அனு நம்ம குடும்பம் போல உள்ளதாக தெரிவிக்கின்றனர். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் அதை பார்த்த ரசிகர் ஒருவர் பிரியா வுக்கு. டி. என். ஏ. டெஸ்ட் எடுத்து பார்க்கலாம்ன்னு. பெரியவர். சொன்னது தான் சூப்பர் என்று கூறியுள்ளார். ரோஜா நாடகத்தில் இன்னும் 2 வருடத்திற்கு அனுவிற்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க விடமாட்டான் இயக்குனர் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அனு முகத்தை பார்த்தால் சிரிப்பு சிரிப்பா வருது.. என கூறியுள்ளார். அந்த பிச்சைக்காரர் குரலைக் கேட்டா பாலு குரல் மாதிரி இருக்கு என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!