பிக் பாஸ் செய்வது கொஞ்சம் கூட நியாயமே இல்லை.. ஆயிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரசிகர்கள்!

0
பிக் பாஸ் செய்வது கொஞ்சம் கூட நியாயமே இல்லை.. ஆயிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரசிகர்கள்!
பிக் பாஸ் செய்வது கொஞ்சம் கூட நியாயமே இல்லை.. ஆயிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரசிகர்கள்!
பிக் பாஸ் செய்வது கொஞ்சம் கூட நியாயமே இல்லை.. ஆயிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன் 6 தற்போது 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் ஆயிஷாவிற்கு அநியாயம் நடப்பதாக ரசிகர்கள் அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீடு:

பிக் பாஸ் சீசன் 6ல் ரசிகர்கள் அதிக ஆர்வத்தோடு எதிர்பார்த்த போட்டியாளராக இருந்தவர் ஆயிஷா. ஆனால் ஆயிஷா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஆரம்ப நாட்களில் மிகவும் வினோதமாக நடந்து கொண்டார். யாருடனும் பேசாமல், தனியாக, எதாவது உடல்நல பிரச்சனையை சொல்லியபடி ஒதுங்கியே இருந்தார். இதனால் தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்ல நினைப்பதாகவும் கூறினார்.

Follow our Instagram for more Latest Updates

ஆனால் அடுத்தது கமல் அவர்களின் அறிவுரைகளை கேட்டு, மெல்ல மெல்ல நிகழ்ச்சியின் வீரியத்தை புரிந்து கொண்டு தனக்கான வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த தொடங்கினார். இந்நிலையில், இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் கொடுக்கப்பட்ட திரைப்பட கதாபாத்திரமாக மாறி முழுவதுமாக அவர்களை போலவே தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

அருணால் அனுவின் குழந்தைக்கு நேர்ந்த ஆபத்து.. கதறி துடிக்கும் சுந்தரி, கார்த்திக் – பரபரப்பான திருப்பம்!

Exams Daily Mobile App Download

அதில், ஆயிஷா மன்மதன் பட சிம்பு கெட்டப்பில் கலக்கி வருகிறார். பேசுவது, நடப்பது, சிரிப்பது, என்று சிறப்பாக சிம்பு போல நடித்து வரும் ஆயிஷா, சிம்புவை போல் நடனம் ஆடியும் அனைவரையும் கவர்ந்து விட்டார். ஆனால் அவரது டான்ஸ் எபிசோடில் காட்டப்படவில்லை. இதனால் பிக் பாஸ் ஆயிஷாவை வெளியேற்ற நினைத்து தான் இப்படி செய்கிறார். இது அநியாயம், பிக் பாஸ் என்ன செய்தாலும், எங்கள் ஓட்டு ஆயிஷாவிற்கு தான் என்று ரசிகர்கள் பலர் கமெண்டுகள் மூலம் தங்கள் ஆதரவை ஆயிஷாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!