வருங்கால கணவர் குறித்து ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி சொன்ன சுவாரசிய தகவல்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

0
வருங்கால கணவர் குறித்து 'குக் வித் கோமாளி' சிவாங்கி சொன்ன சுவாரசிய தகவல்கள் - ரசிகர்கள் உற்சாகம்!
வருங்கால கணவர் குறித்து 'குக் வித் கோமாளி' சிவாங்கி சொன்ன சுவாரசிய தகவல்கள் - ரசிகர்கள் உற்சாகம்!
வருங்கால கணவர் குறித்து ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி சொன்ன சுவாரசிய தகவல்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஹிட் கொடுத்து தற்போது வெள்ளித்திரையில் ஒரு கலக்கி வரும் சிவாங்கி அவரது ரசிகர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு கொடுத்த பதில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

குக் வித் கோமாளி சிவாங்கி :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பாடல்களால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் சிவாங்கி. இவர் பாடல்களை பாடுவதில் புலியாகவும்,பேசும் பொழுது கீச்சு குரலிலும் பேசுவதை மக்கள் விமர்சனம் செய்தனர். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தனது மீடியா வாழ்க்கையில் பயணித்த சிவாங்கி தற்போது விஜய் டிவியின் பாப்புலர் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

நடந்து முடிந்த 2 சீசன்களும் அமோக வெற்றியை கொடுத்தது போலவே சீசன் 3 வெற்றி பாதையில் நகர்கிறது. கடந்த சீசனில் சிவாங்கிக்கும் அஸ்வினுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர அந்த சீசன் மிகப்பெரிய ஹிட்டும் அடித்தது. அதை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கால் தடம் பதித்து மாஸ் காட்டி வருகிறார். அதாவது இவரது சுட்டித்தனத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் அவரது நடிப்பில் வெளியாகிய டான் படத்தில் சிவாங்கிக்கு சூப்பரான ரோல் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ளார்.

PAN, ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – ஜூலை 1க்கு பிறகு ரூ.1000 அபராதம்!

மேலும் சோசியல் மீடியாவில் சூப்பர் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் சிவாங்கி சமீபத்தில் தனது ரசிகர்களுடன் லைவ் சாட் செய்தார். அதில் ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்து கொள்ளப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும், அவருக்கு என்ன மாதிரியான குவாலிட்டிஸ் இருக்க வேண்டும் என நினைக்கிறீங்க என்கிற கேள்வியை எழுப்பினார்கள். அதற்க்கு சிவாங்கி “மனசளவுல ரொம்ப அழகா இருக்கணும்னு” செம க்யூட்டா பதில் சொல்லி ரசிகர்களை வியக்க செய்துள்ளார். இந்த பதிலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், நாங்களும் மனசளவுல அழகு தான்னு புரபோஸ் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here