‘பாரதி கண்ணம்மா’ பரினா ரசிகரின் அட்வைஸுக்கு பதிலடி – கர்ப்பகால போட்டோஷூட்!

0
'பாரதி கண்ணம்மா' பரினா ரசிகரின் அட்வைஸுக்கு பதிலடி - கர்ப்பகால போட்டோஷூட்!
'பாரதி கண்ணம்மா' பரினா ரசிகரின் அட்வைஸுக்கு பதிலடி - கர்ப்பகால போட்டோஷூட்!
‘பாரதி கண்ணம்மா’ பரினா ரசிகரின் அட்வைஸுக்கு பதிலடி – கர்ப்பகால போட்டோஷூட்!

“பாரதி கண்ணம்மா” சீரியல் புகழ் பாரினாவை ரசிகர் ஒருவர் உங்களது கர்ப்பமான வயிற்றினை காட்டி நடிக்கவோ அல்லது போட்டோஷூட் நடத்தவோ வேண்டாம் என்று கூறி உள்ளார். அதற்கு தற்போது பாரினா தக்க பதிலடி ஒன்றினை கொடுத்துள்ளார்.

“பாரதி கண்ணம்மா” பாரினா

விஜய் தொலைக்காட்சியில் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்க வைத்து வரும் ஒரு சீரியல் என்றால், அது பாரதி கண்ணம்மா தான். இந்த சீரியலில் காட்டப்படும் ட்விஸ்ட் மற்ற சீரியல்களில் இல்லை என்று தான் கூற வேண்டும். இப்படியாக இருக்க, இந்த சீரியலில் தற்போது லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான் என்று பாரதிக்கு தெரிந்து விடுகிறது. கூடிய விரைவில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் ட்வின்ஸ் என்ற விஷயமும் பாரதிக்கு தெரிய வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இப்படி பல விறுவிறுப்பான கட்டங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த சீரியலுக்கு பலம் சேர்க்கும் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது வெண்பா தான்.

“பாரதி கண்ணம்மா” சீரியல் புதிய அகிலுடன் பாரதி எடுத்த செல்பி – வைரலாகும் புகைப்படம்!!

அழகான டெரர் வில்லியாக இந்த கதாபாத்திரத்தில் நடிகை பரினா அசாத் நடித்து வருகிறார். இவரது வித்தியாசமான தந்திரங்கள் காரணமாக தான் இன்று வரை பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரிந்து இருக்கின்றனர். தற்போது பரினா நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கிறார். எப்போதுமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பாரினா தற்போது பல போட்டோஷூட்களை நடத்தி வந்தார். அதிலும் கர்ப்பகால பயம் சிறிதும் இன்றி வித்தியாசமாக போஸ் கொடுத்து போட்டோக்களை பதிவிட்டார்.

TN Job “FB  Group” Join Now

இதன் காரணமாக பலரும் அவரை எச்சரித்து வந்தனர். ஆனால், பரினா எதையுமே காதில் வாங்காமல் தனது போக்கில் போட்டோஷூட் நடத்தி வந்தார். அண்மையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் தனது ரசிகர்களுடன் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் கர்ப்ப காலத்தில் இது போன்று போட்டோஷூட் நடத்த வேண்டாம். இதனால் கண்பட்டு விடும் என்று கூறியுள்ளார். அதற்கு பரினா ‘என்னை சுற்றி நல்ல எண்ணங்கள் சூழ்ந்து இருப்பதால் எனக்கு ஒன்றும் ஆகாது’ என்று பதில் கொடுத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!