பிரபல சீரியல் நடிகை தற்கொலை – தொடரும் சின்னத்திரை மரணங்கள்! ரசிகர்கள் ஷாக்!

0
பிரபல சீரியல் நடிகை தற்கொலை - தொடரும் சின்னத்திரை மரணங்கள்! ரசிகர்கள் ஷாக்!
பிரபல சீரியல் நடிகை தற்கொலை - தொடரும் சின்னத்திரை மரணங்கள்! ரசிகர்கள் ஷாக்!
பிரபல சீரியல் நடிகை தற்கொலை – தொடரும் சின்னத்திரை மரணங்கள்! ரசிகர்கள் ஷாக்!

ஓடிசாவில் 23 வயது சீரியல் நடிகை ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டு உள்ளார். இந்த செய்தி புவனேஸ்வரில் உள்ள நயபள்ளி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற சீரியல் நடிகை தற்கொலை செய்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது.

தொடரும் சின்னத்திரை மரணங்கள்:

சின்னத்திரை நடிகைகளின் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் பல மாநிலங்களில் நடந்து கொண்டு தான் வருகிறது. தமிழ் சின்னத்திரையை பொறுத்தவரை சித்ரா தொடங்கி அடுத்தடுத்து மர்ம மரணங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்தவர் சீரியல் நடிகை ரஷ்மிரேகா ஓஜா. இவர் ஓடிசா மொழியில் பல சீரியல்களில் நடித்து வருகிறார். சம்பவத்தன்று அவரின் வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்காததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசாருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

Exams Daily Mobile App Download

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒடியா ரஷ்மிரேகா ஓஜா, புவனேஸ்வரில் உள்ள நயபள்ளி பகுதியில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார், அவரது மரணத்தில் அவரது லிவ்-இன் பார்ட்னர் சந்தோஷ் பத்ராவுக்கு பங்கு இருப்பதாக அவரது தந்தை கூறினார். மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இயற்கை மரணம் என்று வழக்கு உள்ளது. மேலும் 23 வயதான நடிகை ஜூன் 18 ஆம் தேதி இரவு தனது வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் ஒத்திவைப்பு? ரிசர்வ் வங்கி விளக்கம்!

மேலும், தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என ரஷ்மி எழுதி வைத்துள்ளதால், இது தற்கொலை தான் என்ற முடிவுக்கு வந்திருக்கும் காவல்துறையினர் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். ஓஜாவின் தந்தை ஊடகங்களிடம் கூறியது, “சனிக்கிழமையன்று அவருக்கு நாங்கள் செய்த அழைப்புகள் பதிலளிக்கப்படவில்லை. பின்னர், சந்தோஷ் எங்களுக்குச் செய்தியைத் தெரிவித்தார். சந்தோஷ் மற்றும் ராஷ்மி கணவன்-மனைவியாக வாழ்ந்து வருவதாக வீட்டு உரிமையாளரிடம் இருந்து அறிந்தோம். அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது,” என்று அவர் கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here