விஜய் டிவி ‘பிக்பாஸ் 5’ இல் களமிறங்கும் பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி – உறுதி செய்த பதிவு!
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் கண்மணி சேகர், விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 5
ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஆரம்ப ஏற்பாடுகள் எல்லாம் ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், தற்போது போட்டியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது தவிர கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – காவல் ஆணையர் அறிவிப்பு!
கிட்டத்தட்ட 4 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 ஆவது சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பெயர் விவரங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் விஜே பிரியங்கா, திருநங்கை நமீதா, நடிகை கௌசல்யா, நடிகர் நிழல்கள் ரவி, ஷாலு ஷம்மு ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்ல இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் உறுதியானது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் சீசன் 5ன் தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் – யார் யாருனு பாருங்க!
இருந்தாலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், சன் தொலைக்காட்சியின் பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ‘நீண்ட நாட்கள் கழித்து. மாற்றம் ஒன்றே மாறாதது. உங்கள் அதீத அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்மணி வெளியிட்டுள்ள பதிவு அவர் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த பிக்பாஸ் சீஸன் 4 நிகழ்ச்சியில் சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் அனிதா கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.