விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது நடந்து வரும் காட்சிகள் அனைத்தும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் முக்கிய நடிகை ஒருவர் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புது என்ட்ரி:

பாரதி கண்ணம்மா சீரியலில் இத்தனை வருடங்களாக இவர்களின் தனிப்பட்ட பிரச்னைகளை மட்டும் சுற்றியே கதை நகர்ந்து வந்தது. இதனால் அரைத்த மாவையே அரைப்பதாக ரசிகர்கள் மத்தியில் சலிப்பு ஏற்பட தொடங்கியது, இதன் விளைவாக சீரியலின் டிஆர்பி பின்தங்கியது. அதனால் தற்போது இவர்களின் குடும்ப கதையை விட்டு விட்டு சற்று சமூக கருத்துக்களை பற்றிய காட்சிகள் வரத்தொடங்கியுள்ளது. மேலும் மற்றும் ஒரு திருப்பம் ஒன்றும் ஏற்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

லட்சுமி தன் அப்பா பாரதி தான் என்பதை அறிந்து கொண்ட விஷயம் கண்ணம்மாவிற்கு தெரிய வந்துள்ளது. இதை பற்றி தெரிந்தும் ஏன் லட்சுமி அமைதியாக இருக்கிறாள் என்று கண்ணம்மா மிகவும் ஆச்சர்யத்தில் இருக்கிறார். கண்ணம்மா லக்ஷ்மியை பற்றி சௌந்தர்யா மற்றும் வேணுவிடமும் சொல்லி விடுகிறார். இன்னொரு புறம் பாரதி தான் இன்னொரு திருமணம் செய்து கொள்ள சம்மதம் அளித்துள்ளார். ஒரு வேலை வெண்பாவை தான் திருமணம் செய்து கொள்வாரா பாரதி என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் தான் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது சன் டிவியில் தற்போது தாலாட்டு சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி ராஜ் பாரதி கண்ணம்மா சீரியலில் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் பாரதி திருமணம் செய்து கொள்ள போகும் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் ஸ்ருதி ராஜ் விஜய் டிவிக்கு புதிய நடிகை இல்லை. அவர் ஏற்கனேவே சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிய ஆபிஸ் சீரியலில் நடித்தவர் தான். இதனால் ஸ்ருதியின் ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!