சீரியலிலும், நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
தமிழ் சின்னத்திரையில் டாப் சேனல்களில் ஒன்றான சன் டிவியில் பிரபலமான சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஒருவர் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் சீரியலிலும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து, தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சீரியல் நடிகை:
சின்னத்திரை சீரியல் நடிகர் நடிகைகளுக்கு சினிமா நடிகர் நடிகைகளை போல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த காலத்தில் வயதானவர்கள் தான் சீரியல் பார்ப்பார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறி இளசுகள் முதல் பெருசுகள் வரை சீரியல் பார்க்கின்றனர். அந்த வகையில் பல ஆண்டுகளாக சீரியல் என்றாலே நமது நியாபகத்திற்கு வரும் சேனல் தான் சன் டிவி. இதில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர். அதில் வரும் கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் சன் டிவியில் ப்ரைம் டைம் இல்லாத பிரபலமான சீரியல் தான் பாண்டவர் இல்லம் இந்த சீரியலில், ஐந்து மருமகள்களில் இருவர் கர்ப்பமாக இருப்பது போல காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. அதில் கயலாக நடித்து கொண்டிருக்கும் நடிகை அப்ரின் மற்றும் ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை அணு ஆகியோர் கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டு வருகிறது. அதில் நடிகை அணு தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருப்பதாக தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அடேங்கப்பா.. இந்த பேமஸ் நடிகை சீரியலில் நடிக்க போறாங்களா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் சின்னத்திரை!
Exams Daily Mobile App Download
தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பற்றி இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சீரியலில் கடந்த 1 மாதமாக கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டு வரும் நிலையில், நிஜ வாழ்க்கையிலும் அவர் கர்ப்பமாக இருப்பதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். மேலும் அவர் தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்