இனி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியாக களமிறங்கும் பிரபல நடிகர் – ரசிகர்கள் ஷாக்!

0
இனி
இனி "பாரதி கண்ணம்மா" சீரியலில் பாரதியாக களமிறங்கும் பிரபல நடிகர் - ரசிகர்கள் ஷாக்!
இனி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியாக களமிறங்கும் பிரபல நடிகர் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொடக்கத்தில் இருந்து பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக ஆர்யன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கதைக்களம் அடுத்தகட்டத்துக்கு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. லக்ஷ்மிக்கு பாரதி பற்றிய உண்மை எல்லாம் தெரிந்து விட்டது என கண்ணம்மாவிற்கு தெரிய வர அவர் அதிர்ச்சி அடைகிறார். சௌந்தர்யாவிடம் இது பற்றி சொல்ல அவர் எனக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்ததாக கூறுகிறார். இந்த சிறு வயதில் லட்சுமி இவ்வளவு பக்குவமாக எப்படி இருக்கிறாள் என நினைத்து சந்தோஷப்படுகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் லக்ஷ்மிக்காக கண்ணம்மா பாரதி சேர்ந்து இருக்க இருக்கிறார்களா என்பது எல்லாம் காட்டப்பட இருக்கிறது. இதற்கிடையே சக்தி எந்த பிரச்சனையும் இல்லாமல் கண் விழித்து பேச அவர் கண்ணம்மா ஆன்டி எங்கே? என கேட்கிறார். அப்போது கண்ணம்மா வர பாரதி கண்ணம்மாவின் அக்கறையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மேலும் ஆயிஷாவின் அம்மா அப்பா வர, சக்தியின் அம்மா அப்பா இனிமேல் இவர்களும் உனக்கு அப்பா அம்மா தான் என சொல்கிறார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – சரவணன் கைக்கு வந்த முக்கிய ஆதாரம்!

இப்படி பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்க பல காட்சிகள் அடுத்தடுத்து வைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கதையில் பெரிய மாற்றம் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்பது போல தெரிகிறது. இந்நிலையில் தற்போது பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் சீரியலை விட்டு விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யன் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!