பாக்கியாவுடன் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பத்தினர், அதிர்ச்சியில் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!

0
பாக்கியாவுடன் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பத்தினர், அதிர்ச்சியில் கோபி - ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவுடன் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பத்தினர், அதிர்ச்சியில் கோபி - ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவுடன் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பத்தினர், அதிர்ச்சியில் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!

ராதிகாவுக்கும் கோபிக்கும் இடையேயான உறவு பற்றி குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இந்நிலையில், ராதிகாவை இங்கே கூட்டி வா என சொல்லிவிட்டு குடும்பமே வீட்டை விட்டு வெளியேறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் மொத்த குடும்பத்திற்கும் கோபிக்கும் ராதிகாவிற்கும் இடையேயான உறவு பற்றி தெரிந்துவிடுகிறது. இதற்கு பிறகு பாக்கியா என்ன முடிவெடுக்கப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது பாக்கியா கோபி மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்தார். யார் கோபியை பற்றி தவறாக பேசினாலும் அதை நம்பவே மாட்டார். ஆனால், தற்போது பாக்கியாவின் கண் முன்னவே கோபி தவறு செய்யும் போது பாக்கியாவால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

Exams Daily Mobile App Download

அதாவது, கோபியும் ராதிகாவும் கையை பிடித்து கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்ததும் பாக்கியா நொறுங்கிவிடுகிறார். எப்படியும் கோபியிடம் இது பற்றி கேட்காமல் அமைதியாக தான் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொறுத்துக்கொள்ள முடியாமல் குடும்பத்தினர்கள் முன்னிலையில் மொத்த உண்மையையும் போட்டு உடைக்கிறார். அதாவது, ராதிகாவிற்கும் கோபிக்கும் தொடர்பு இருக்கிறது என கூறியதுமே ஈஸ்வரி ராதிகாவை பார்க்கும் போதே நினைத்தேன் கூறுகிறார். உடனே பாக்கியா, ராதிகா மீது எந்த தவறும் கிடையாது இவர் தான் குடும்பத்தையே தவறாக சொல்லி ராதிகாவை காதலிக்க வைத்திருக்கிறார் என கூறுகிறார்.

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

மொத்த குடும்பமே கோபியை வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். பின்பு, உங்களுக்கு பிடித்தது போலவே ராதிகாவுடன் சேர்ந்து சந்தோசமாக வாழுங்கள் என பாக்கியா கூறுகிறார். இதுமட்டுமல்லாமல் இதற்கு மேலும் நான் உங்களுக்கு தொந்தரவாக இருக்க மாட்டேன் என கூறி பாக்கியா வீட்டை விட்டே கிளம்புகிறார். குடும்பத்தினர்கள் அனைவரும் பாக்கியாவை எவ்வளவு சமாதானப்படுத்த முயற்சித்தாலும் பாக்கியா வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். பின்பு, ராதிகாவை இங்கே கூட்டி வந்து நிம்மதியாக வாழ்க்கையை நடத்து என கூறிவிட்டு குடும்பமே வீட்டை விட்டு செல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here