மக்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் 3 வகையான மருத்துவத் திட்டங்கள் அறிமுகம் – அறிவிப்பை வெளியிட்ட ஆந்திரா அரசு!!

0
மக்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் 3 வகையான மருத்துவத் திட்டங்கள் அறிமுகம் - அறிவிப்பை வெளியிட்ட ஆந்திரா அரசு!!
மக்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் 3 வகையான மருத்துவத் திட்டங்கள் அறிமுகம் - அறிவிப்பை வெளியிட்ட ஆந்திரா அரசு!!
மக்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் 3 வகையான மருத்துவத் திட்டங்கள் அறிமுகம் – அறிவிப்பை வெளியிட்ட ஆந்திரா அரசு!!

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் தலைமையிலான மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் மாநிலம் முழுவதும் 3 வகையான மருத்துவத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ திட்டங்கள்

ஆந்திர மாநிலத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தொடர்பாக ஆய்வு கூட்டம் ஒன்று முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தின் முடிவில், மார்ச் 1ஆம் தேதி முதல் 3 வகையான மருத்துவ திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இது தொடர்பாக முதல்வர் அறிவித்துள்ளதாவது, மார்ச் 1 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் குடும்ப மருத்துவர் என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதைத்தொடர்ந்து, குழந்தைகளின் உடல்நலம் மேம்படும் வகையில் Gorumudda scheme என்ற திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 முறை ராகி மால்ட் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் எம்எல்ஏக்கள் மற்றும் பிற மக்களின் பிரதிநிதிகள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

10,000 ஊழியர்களை பணிக்கு அமர்த்த திட்டம் – Boeing நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

மேலும் புற்றுநோய் சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்த cath labs மற்றும் புற்றுநோய் பரிசோதனை கருவிகளை (cancer testing equipment) அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதுமட்டுமல்லாமல் கிராமப்புறத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கு ரத்த சோகை இருப்பதை கண்டறிந்து, அவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு மற்றும் மருந்துகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!