“குக் வித் கோமாளி” புகழை பற்றி வந்த பொய்யான தகவல் – அவரே வெளியிட்ட எச்சரிக்கை பதிவு!

0
"குக் வித் கோமாளி" புகழை பற்றி வந்த பொய்யான தகவல் - அவரே வெளியிட்ட எச்சரிக்கை பதிவு!
“குக் வித் கோமாளி” புகழை பற்றி வந்த பொய்யான தகவல் – அவரே வெளியிட்ட எச்சரிக்கை பதிவு!

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து தற்போது சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் புகழ், தன்னை பற்றி வைரலாகும் பொய்யான செய்திகள் பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் புகழ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பிடித்துள்ளது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரு சமையல் நகைச்சுவை நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் கோமாளியாக களமிறங்கியவர் தான் புகழ். அதற்கு முன் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பெண் வேடத்தில் வந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவருக்கு பெரிய உச்சத்தை கொடுத்தது.

Exams Daily Mobile App Download

தற்போது மூன்றாவது சீசன் வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தாலும் அதில் புகழ் இல்லை என்ற ஒரு குறை இருக்கிறது. அதை அவ்வப்போது வந்து புகழ் பூர்த்தி செய்கிறார். சாதாரண கோமாளியாக நிகழ்ச்சிக்கு வந்த அவர் தற்போது சினிமாவில் தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் கூட அவர் நடித்திருந்தார். இந்நிலையில் புகழ் பல கடைகள் திறப்பு விழாவிற்கும், காலேஜ் நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு விருந்தினராக செல்வார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை ரியாவின் புதிய அவதாரம் – வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

அந்த வகையில் இன்ஸ்டாவில் ஒரு தனியார் காலேஜ் பெயரை குறிப்பிட்டு அதற்கு சிறப்பு விருந்தினராக புகழ் வருவதாக பதிவு ஒன்று வெளியானது. அதில் புகழின் ரசிகர் ஒருவர் புகழை டேக் செய்து உங்களை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என சொல்லி இருக்கிறார். ஆனால் அது உண்மை இல்லை என புகழ் தரப்பில் இருந்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் இது போல பொய்யான தகவல்களை என் பெயரில் பகிர வேண்டும் என அவர் பதிவிட்டிருந்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!