பழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து உள்ளது என்ற தகவல் உண்மையா??

0
பழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து உள்ளது என்ற தகவல் உண்மையா
பழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து உள்ளது என்ற தகவல் உண்மையா

பழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து உள்ளது என்ற தகவல் உண்மையா??

சீனாவில் இருந்து பரவிய கொடிய நோயான கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை விட அதை பற்றிய வதந்திகளே அதிகம் பரவுகின்றன. இதை தொடர்ந்து பழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் அப்பட்டமான பொய் என்பது தெரிய வந்துள்ளது.

பழங்கால மருந்து

சமூக வலைதளங்களில் 1914-ம் ஆண்டு வெளியான கைமுறை பாக்கெட் வயித்தியம் என்ற நூலில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என தகவல் பரப்பப்பட்டு வருகிறது. 1914-ம் ஆண்டு பூ.சு. துளசிங்க முதலியாரால் ஏட்டுப் பிரதியும் கை முறையும் அச்சுப் பிரதியுங்கொண்டு ஆய்ந்து யெழுதி முடிவு பெற்று என்ற முகப்புரையுடன் இந்த நூலின் முதல் பக்கம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.

வெளியூர் செல்வதற்கு தமிழக அரசின் ‘Covid 19 e-Pass’ பெறுவது எப்படி தெரியுமா..? முழு விபரங்கள் இதோ..!

அதில்தான் 1914-ம் ஆண்டு இந்த நூல் அச்சிடப்பட்டதாக இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் பக்கம் 61-ல் கோரோன மாத்திரை என்ற தலைப்பில் பழந்தமிழர் மருத்துவ முறை ஒன்றும் இடம் பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது மிளகு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி எப்படி இந்த மாத்திர தயாரிப்பது என்பதற்கான செய்முறை விளக்கம் இதில் இடம்பெற்றிருக்கிறது.

ஏப்ரல் 5 மகாசக்தியை வெளிப்படுத்துவோம் – கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடியின் உரை..!

ஆனால் இந்த நூலின் பக்கம் 61-ல் இடம்பெற்றிருந்தது கோரோசன மாத்திரை என்ற தலைப்புதான். இதில்தான் சில சமூக விரோதிகள் ச என்ற எழுத்தை போட்டோஷாப் மூலம் நீக்கிவிட்டு கோரோன மாத்திரை என பொய்யாக ஒரு படத்தை உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளன. தற்போது அதை பற்றி உண்மை தகவல் வெளியாகி உள்ளது அதாவது அந்த பக்கத்துடைய ஒரிஜினல் 61 ம் பக்கமும் போலியான 61 ஆம் பக்கமும் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 14க்கு பிறகு ரயில், விமான பயணத்திற்கான முன்பதிவு தொடக்கம்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!