தமிழக அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் ரத்து? பரவும் போலி செய்தி!

0
தமிழக அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் ரத்து? பரவும் போலி செய்தி!
தமிழக அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் ரத்து? பரவும் போலி செய்தி!
தமிழக அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் ரத்து? பரவும் போலி செய்தி!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நேரத்தில் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை ரத்து செய்ய உள்ளதாக போலியான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக பெண்கள் இலவசமாக உள்ளூர் அரசு பேருந்துகளில் பயணிக்கும் திட்டத்தை அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த திட்டம் மகளிர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அரசுக்கு நிதி நெருக்கடி நிலை காரணமாக இந்த திட்டத்தை ரத்து செய்ய உள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது.

TNPSC 5000+ காலிப்பணியிடங்களுக்கான குரூப் 2 & 2A தேர்வு – பிப்.18 இல் அறிவிப்பு!

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பொதுமக்களின் வாக்குகளை பெற அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு பொது கூட்டங்களையும் மற்றும் பிரச்சாரங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சாரங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2022 – மாநில அரசு அறிவிப்பு!

அத்துடன் ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியினரை இகழ்ந்து பேசுவதும் இடம்பெறும். இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்பட வாய்ப்பு இல்லை. அத்துடன் அரசு பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணத்தை நிறுத்த உள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார் என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது செய்தியோ வெளியாகவில்லை. இதனை உண்மையான செய்தி போன்று எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பொதுமக்கள் யாரும் இது பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here