கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரவல் – இந்தியா முதலிடம்!

0
கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரவல் - இந்தியா முதலிடம்!
கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரவல் - இந்தியா முதலிடம்!
கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரவல் – இந்தியா முதலிடம்!

உலகம் முழுவதும் கொரோனா தொடர்பாக பரவிய வதந்திகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 18.07 சதவீதம் வதந்திகள் பரவியுள்ளது என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

கொரோனா குறித்த வதந்திகள்:

உலகம் முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை எதிர்க்க பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக பொய்யான வதந்திகள் சமூக ஊடகங்கள் வாயிலாக அதிகம் பரவியது. இதனால் மக்கள் தேவையின்றி அச்சப்பட தொடங்கினர். குறிப்பாக கொரோனா தடுப்பூசிகள் குறித்த போலி தகவல்களால் ஏராளமான மக்கள் தடுப்பூசி செலுத்த தயங்கினர்.

தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் – முதல்வர் ஆலோசனை!

வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கொரோனா தொடர்பாக போலி தகவல்களை உண்மை போலவே சித்தரித்து நெட்டிசன்கள் பகிர்ந்து வந்தனர். விழிப்புணர்வு இல்லதாக மக்கள் அதை உண்மை என்று நம்பி சில விபரீத முடிவுகளை எடுத்து பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா குறித்து 138 நாடுகளில் பரவிய 9,657 வதந்திகள் குறித்து 94 அமைப்புகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியாவில் 18.07% சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பியது கண்டறியப்பட்டு இந்தியா முதலிடத்தில் உள்ளது.

6000 பேருக்கு வேலைவாய்ப்பு, புதிதாக 100 விற்பனையகங்கள் – Xiaomi அறிவிப்பு!

அதிக இன்டர்நெட் வசதி, இன்டர்நெட் பற்றிய குறைவான அறிவு ஆகிய காரணங்களால் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அமெரிக்கா 9.74 சதவீதமும், பிரேசில் 8.57 சதவீதமும், ஸ்பெயின் 8.03 சதவீதம் வதந்திகளை பரப்பியுள்ளன. 84% வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியதாகவும், அதில் 66.87% பேஸ்புக் மூலம் பரவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here