வாட்ஸ் அப் பயனரா நீங்கள்? உங்களை உளவு பார்க்கும் போலி செயலிகள் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

0
வாட்ஸ் அப் பயனரா நீங்கள்? உங்களை உளவு பார்க்கும் போலி செயலிகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்!
வாட்ஸ் அப் பயனரா நீங்கள்? உங்களை உளவு பார்க்கும் போலி செயலிகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்!
வாட்ஸ் அப் பயனரா நீங்கள்? உங்களை உளவு பார்க்கும் போலி செயலிகள் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

நாடு முழுவதும் மக்கள் பலர் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கிய நிலையில், பல போலி செயலிகள் மூலமாக உங்களுடைய வாட்ஸ் அப் சாட்கள் உளவு பார்க்கப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

வாட்ஸ் ஆப் சாட்கள்:

பெருவாரியான மக்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல தகவல் தொழில்நுட்பமும் முன்னேறி வருகிறது. ஒரு பக்கம் அதனால் நன்மை இருந்தாலும், மறுபக்கம் அதன் மூலம் மோசடிகள் அதிகமாகி இருக்கிறது. மேலும் உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் எளிமையாக திருடப்படுகின்றன. இந்நிலையில் இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதில், ஜிபி வாட்ஸ் அப் எனப்படும் வாட்ஸ் அப்பின் பிரபலமான ஆனால் குளோன் செய்யப்பட்ட மூன்றாம் தரப்பு பதிப்பு மூலமாக கடந்த நான்கு மாதங்களில் அதிகமான ஆண்ட்ராய்டு ஸ்பைவேர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக உங்களது ஆடியோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்யலாம். இது போல குளோன் செய்யப்பட்ட ஆப் Google Play-ல் இருக்காது.

தீபாவளியை முன்னிட்டு ‘இந்த’ நிறுவனத்தில் 10 நாட்கள் லீவ் – குஷியில் ஊழியர்கள்!!

Exams Daily Mobile App Download

இது குறித்து ESET நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சி அதிகாரி ரோமன் கோவாக் கூறுகையில், இந்த செயலியின் மூலமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா இருக்கிறது. மேலும் இது போன்ற செயலி மூலமாக பயனர்களின் தரவுகள் திருடப்படும் எனவும், ஒரு நாட்டையே வேவு பார்க்க இது போல செயலிகள் பயன்படுவதாக அவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை அளித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!