மத்திய அரசு நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
மத்திய அரசு நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!

 Cook-cum Bearer பணிக்கென மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருவிதாங்கூர், உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் (FACT) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 02 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் FACT
பணியின் பெயர் Cook-cum Bearer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2024 / 06.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online / Offline

FACT காலியிடங்கள்:

Cook-cum Bearer பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே FACT நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Cook-cum Bearer கல்வி:

இந்த FACT நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு + Food Production / Cooking பாடப்பிரிவில் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Cook-cum Bearer வயது:  

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்கு மேற்படாதவராக இருப்பது அவசியமானது ஆகும்.

3 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அமலாகும் புதிய பாட திட்டம் – மத்திய அரசு சுற்றறிக்கை!

Cook-cum Bearer மாத சம்பளம்:

Cook-cum Bearer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.22,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

FACT தேர்வு செய்யும் விதம்:

இந்த FACT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Merit List, Practical Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

FACT விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 28.02.2024 என்ற இறுதி நாளுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலை 06.03.2024 என்ற இறுதி நாளுக்குள் தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!