தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக ரேஷன் கடைகள் திறப்பு பற்றி அறியும் வசதி – முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக ரேஷன் கடைகள் திறப்பு பற்றி அறியும் வசதி - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக ரேஷன் கடைகள் திறப்பு பற்றி அறியும் வசதி - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக ரேஷன் கடைகள் திறப்பு பற்றி அறியும் வசதி – முழு விவரம் இதோ!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கு சில அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் உங்களது பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடைகள் திறந்து இருக்கிறதா என்பதை ஆன்லைன் மூலமாக எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் கடைகள்:

தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகள் மூலமாக அரசு சார்பில் மலிவு விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகிறது. மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளும் உதவி தொகைகளும் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மாதந்தோறும் கட்டாயம் ரேஷன் பொருள்களை வாங்க வேண்டும். ஆனால் ஒரு சில நேரங்களில் ரேஷன் கடைகள் திறந்திருக்கிறதா என தெரியாமல் மக்கள் அலையும் நிலை ஏற்படுகிறது.

அதற்காக வீட்டில் இருந்தபடியே உங்களது பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடைகள் திறந்து இருக்கிறதா என்பதை ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் படி உங்கள் ஊரில் ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என தெரிந்துகொள்ள https://www.tnpds.gov.in/ என இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் பொது விநியோகத் திட்ட அறிக்கைகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 18) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதில் உங்களது ஊரின் விவரங்கள் காட்டப்படும். அதில் கடை திறந்து உள்ளது என்றால் ஆன்லைன் என்றும், கடை திறக்கவில்லை என்றால் ஆப்லைன் என்று சிவப்பு நிறத்திலும் குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும் கடை திறந்து ஆன்லைன் காட்டினால் பச்சை நிறத்தில் இருக்கும். அதன் மூலம் உங்கள் ரேஷன் கடை இருப்பு நிலையை தெரிந்து கொள்ளலாம். மேலும் உங்கள் ரேஷன் கடை இருப்பு நிலையையும் இந்த பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். அதற்கு பொருட்கள் இருப்பு நிலை என்பதை கிளிக் செய்தால் எந்த பொருட்கள் எவ்வளவு உள்ளது என்ற விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த பக்கத்தில் மக்கள் ரேஷன் கடைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். அந்த புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் புகார் தீர்க்கப்பட்டதா என்பதையும் தெரிந்துள்ள முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here