ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!

மத்திய அரசு அறிமுகப்படுத்திய மேரா ரேஷன் செயலியின் அனைத்து முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்த பதிவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் பயனடைவார்கள்.

மேரா ரேஷன் செயலி:

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மேரா ரேஷன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க உதவும் வகையிலும், ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி ரேஷன் சேவைகளை எளிமையாக பெறும் வகையிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பெறுவதற்கான ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் உள்ளது.

சம்பளம் 50% உயர்வு, அனைவர்க்கும் 2000 லிட்டர் டீசல் இலவசம் – சட்டப்பேரவையில் தீர்மானம்!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பிடிஎஸ் எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களைப் பெறுவது வழக்கம். ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது, PDS நன்மைகளைப் பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளது. இப்போது மேரா ரேஷன் செயலி மூலம் இந்த பிரச்சினை தீர்க்கப்படும். பயனாளிகள் நாடு முழுவதும் ரேஷன் கார்டு சேவைகளைப் பெற முடியும். மேலும்,

மக்கள் தங்கள் விரல் நுனியில் அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள். முன்னதாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இந்த செயலி இருந்தது. தற்போது 10 மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:
  • ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பித்து பயனர் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
  • ரேஷன் கார்டு எண் அல்லது ஆதார் எண் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து நமக்கு அரசு வழங்கியுள்ள அளவுகளை அறிந்து கொள்ளலாம்.
  • பயனர்கள், தங்கள் இருப்பிடத்தை இணையத்தின் மூலம் தெரிவித்து அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களையும் பயனர் சரிபார்க்கலாம்.
  • ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் தங்கள் பரிவர்த்தனை விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணைப் பயன்படுத்தி கார்டுதாரரின் தகுதியை சரிபார்க்கலாம்.
  • பயனாளி தனது மொபைல் எண் மற்றும் கார்டு எண்ணைப் பகிர்வதன் மூலம் ரேஷன் சேவைகளை பற்றிய தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!