BOB வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – தவறாமல் படிங்க!

0
BOB வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - தவறாமல் படிங்க!
BOB வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - தவறாமல் படிங்க!
BOB வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – தவறாமல் படிங்க!

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் கணக்கு வைத்து உள்ளவர்களுக்கு வங்கியின் சார்பில் தற்போது நிறைய சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் கணக்கு வைத்து உள்ளவர்கள் கொடுக்கப்பட்ட சலுகைகளை பார்த்து பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி:

பேங்க் ஆஃப் பரோடா வங்கி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தனது வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு சில புதிய விதிகளை அறிவித்து இருந்தது. அந்த விதிகளை பயன்படுத்தி செக் கிளியரன்ஸ் தொடர்பான பேங்க் ஆஃப் பரோடாவின் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் பிப்ரவரி 1 முதல் காசோலையின் பேமெண்டுக்கு உறுதிப்படுத்தும் முறையை கட்டாயம் எனவும் தெரிவித்தது. அதனை தொடர்ந்து காசோலைக்கான தொகை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், காசோலை திரும்ப கொடுக்கப்படும் எனவும், ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட காசோலைகளுக்கு மட்டும் தான் இந்த விதிகள் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பணம் சம்பாரிக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – A டூ Z விபரங்கள் இதோ!

அது மட்டுமல்லாமல் பேங்க் ஆப் பரோடா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக பாசிட்டிவ் பே கன்ஃபர்மேஷனுக்காக 8422009988 என்ற மொபைல் நம்பரை அறிவித்துள்ளது. இந்த நம்பரில் வாடிக்கையாளர் தங்களது கணக்கு எண், காசோலை எண், காசோலை கணக்கு விவரம், தேதி, பரிவர்த்தனை குறியீடு, பணம் பெறுபவரின் பெயர் ஆகிய விவரங்களை அனுப்பினால், காசோலை உறுதிபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், எஸ்பிஐ மற்றும் மற்ற வங்கிகளை தொடர்ந்து பேங்க் ஆப் பரோடா வங்கியும் எஃப்டி வட்டி விகிதங்களை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பின்னர் பேங்க் ஆஃப் பரோடாவின் சமீபத்திய FD வட்டி விகிதங்கள், 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வுகளுக்கு 2.80 சதவீதம் முதல் 5.25 சதவீதம் வரையும், முதிர்வு காலம் 46 நாட்கள் முதல் 180 நாட்கள் மற்றும் 181 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை உள்ள ஃபிக்சட் டெபாசிட்களுக்கு பாங்க் ஆப் பரோடா வங்கி முறையே 3.7 சதவீதம் மற்றும் 4.30 சதவீத வட்டியை வழங்குகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – கைரேகை சரிபார்க்காமலே பொருட்கள் வாங்கலாம்!

271 நாட்கள் அல்லது அதற்கு மேல் ஆனால் 1 வருடத்திற்கு குறைவான காலத்தில் முதிர்ச்சியடையும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 4.4 சதவீத வட்டியும், ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 5 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.மேலும் 1 ஆண்டுக்கு மேல் மற்றும் மூன்று ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 5.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 5.25 சதவீத விகிதத்தை வழங்குகிறது. 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு பாங்க் ஆப் பரோடா 5.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!