கோபியை அடித்து தள்ளிய எழில் – பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சி!

0
கோபியை அடித்து தள்ளிய எழில் - பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சி!
கோபியை அடித்து தள்ளிய எழில் - பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சி!
கோபியை அடித்து தள்ளிய எழில் – பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் அப்பா, மகனாக நடிக்கும் கோபி மற்றும் எழில் கதாபாத்திரங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் இன்ஸ்டா பதிவு வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

விஜய் டிவியின் சீரியல் என்றாலே பெண்களிடத்தில் தனி இடம் உண்டு. அன்றாட வாழ்வில் நடக்கும் கதையம்சங்களை கொண்ட தொடர்கள் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்ப்பை பெறும். அந்த வகையில் பாக்கியா என்ற இல்லத்தரசியின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து அவரது குடும்பத்தை சுற்றி நடக்கும் கதையம்சத்தை கொண்டது பாக்கியலட்சுமி சீரியல். இதில், பாக்கியா, அவரது கணவர் கோபி, அவரது மகன்கள் இருவர், மகள், மருமகள், மாமனார், மாமியார் என்று ஒரு பெரிய குடும்பத்தின் கதையாக உள்ளது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் குழந்தையுடன் வெளியான போட்டோ – இணையத்தில் வைரல்!

இந்த தொடர் ஆரம்பத்தில் ரசிகர்களிடம் அந்த அளவு வரவேற்பை பெறவில்லை. கதை நகர நகர தொடருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க தொடங்கியது. தொடரில் பாக்கியாவின் கணவர் கோபி தனது பள்ளி தோழி ஒருவருடன் குடும்பத்திற்கு தெரியாமல் பழகி வருகிறார். இதனை அவரது இளைய மகன் எழில் தெரிந்து கொண்டு, தந்தையை கண்டிக்கிறான். ஆனால் கோபி அதனை கண்டுகொள்ளாமல் தோழியுடனான பழக்கத்தை தொடர்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி மோதல் காட்சிகள் வரும். இதனால் இவர்கள் இருவரும் இணைந்து வரும் காட்சிக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில், தற்போது மகனான எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபியுடன் சண்டையிடுவது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இருவரும் மல்யுத்த வீர்ரகள் போல் மாறி மாறி அடித்துக் கொள்வது போல் உள்ளது. இந்த வீடியோ பதிவு ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!