எழில், அமிர்தாவின் திருமண வைபோகம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

0
எழில், அமிர்தாவின் திருமண வைபோகம் - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
எழில், அமிர்தாவின் திருமண வைபோகம் - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
எழில், அமிர்தாவின் திருமண வைபோகம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

ராதிகா மற்றும் கோபியின் திருமணம் நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த வாரம் எழில் அமிர்தாவின் திருமண வைபவம் நடைபெற இருக்கிறது. மணமேடையில் எழில் தாலி கட்டும்போது அமிர்தா கண் கலங்கும்படியான புரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் எப்போது தான் தெரிய வர போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என கோபி முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பாக்கியாவின் இரண்டாவது மகனான எழில் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது அமிர்தா விதவை என்பது தெரியாமல் அமிர்தாவின் மீது எழிலுக்கு காதல் வருகிறது. பின்பு, அமிர்தா விதவை என்பது தெரிந்த பின்பும் கூட காதலை மறக்க முடியாமல் அவளுடன் சேர்ந்து வாழவேண்டும் என நினைக்கிறார். இதற்கு பிறகு அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது என்பதை தெரிந்து எழில் அதிர்ச்சி அடைகிறார்.

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு – அரசு திட்டம்! விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

இருப்பினும் அமிர்தாவுக்கு ஒரு நல்ல கணவனாக இருக்க வேண்டும் எனவே எழில் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் அமிர்தாவுக்கு எழில் மீது எந்த விருப்பமும் இல்லை. இதன் பின்பு கல்லூரியில் அமிர்தாவிற்காக எழில் ரவுடிகளுடன் சண்டை போட்ட போது தான் எழில் மீது அமிர்தாவுக்கு காதல் வருகிறது. இந்த வாரம் எழில் மற்றும் அமிர்தாவின் திருமண வைபோகம் நடைபெற இருக்கிறது. மணமேடையில் எழில் அமிர்தா கழுத்தில் தாலி கட்டும்போது அம்ரிதா கண்கலங்கும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here