தமிழகத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை – அரசு உத்தரவு!

0
தமிழகத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை - அரசு உத்தரவு!
தமிழகத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை – அரசு உத்தரவு!

தமிழகத்தில் சாதாரண, சன்னரக நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை நாளை முதல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசு செய்தி அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தற்போதைய அரசு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை அடுத்து விவசாயிகளுக்கும் தேவையான சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 50,000 விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். மேலும் மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் நீட் மோசடியை தடுப்பதற்கான வழிமுறைகள் – சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரை!

இந்த நிலையில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100ம் கூடுதல் ஊக்கத்தொகையாக நாளை முதல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021-2022 காரீப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதே போல் இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2022-2023 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன் படி ஒன்றிய அரசு காரீப் 2022-2023 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2040 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060 என்றும் நிர்ணயம் செய்துள்ளது. இதே போல் தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2115 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் தமிழக அரசின் இந்த ஊக்கத்தொகையை நாளை முதல் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!