இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல்? மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

0
இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல்? மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல்? மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல்? மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

இ-சேவை மையம் நடத்த அனுமதி பெற்றுள்ள சில தனியார் கணினி மையங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இவ்வாறு அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இ-சேவை மையம்:

அரசு ஆவணங்களை பதிவு செய்வதில் இ-சேவை மையங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. பல தனியார் கணினி மையங்களில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட இ-சேவை மையங்களில் 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்கள், 6 வகையான முதியோர் உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் விண்ணப்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு விண்ணப்பிக்கும் சான்றிதழ்களில் எழுத்துப்பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல் போன்றவற்றிற்காக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

BYJU’S நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அரசு பொது இ-சேவை மையங்களில் வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ.10-ம், சமூகநலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவித் திட்டங்கள் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ. 120-ம், இணையவழி பட்டா மாறுதல்கள் தொடா்டபான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ.60-ம் சேவைக்கட்டணமாக தமிழக அரசினால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA, HRA அதிகரிப்பு – இரட்டை போனஸ்? சூப்பர் தகவல்!

ஆனால் சில தனியார் கணினி மையங்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் நிறுவனங்கள் குறித்து தெரிய வந்தால் இ-சேவை மைய உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்களை பொதுமக்கள் அளிக்க விரும்பினால் 18004251333 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here