தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ஆணை!

1
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ஆணை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ஆணை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ஆணை!

தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் பெற்றுள்ள கூடுதல் கல்வித்தகுதிக்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக தலைமை செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். இதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளார்.

கல்வி ஊக்கத்தொகை:

அரசுத்துறை ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் பெறும் கூடுதல் கல்வித்தகுதிக்கு ஊக்கத்தொகை வழங்கும் முறை முன்னதாக அமலில் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில், மத்திய அரசு சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் கல்வித்தகுதி ஊக்கதொகை தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஊக்க ஊதிய உயா்வை வழங்குவது குறித்த அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க ஸ்டாலின் அறிவித்தாா்.

நீரஜ் சோப்ரா உட்பட 12 பேருக்கு ‘தயான் சந்த் கேல் ரத்னா’ விருது – தேசிய விளையாட்டு விருதுகள் குழு!

அரசின் இந்த அறிவிப்பு குறித்து தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, அரசு ஊழியா்களில் முனைவா் பட்டம் பெற்றோருக்கு ரூ.25,000 ஊக்க ஊதியத் தொகையும், பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு படித்தோருக்கு ரூ.20 ஆயிரமும், பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு படித்திருந்தால் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். அரசு பதவிக்கென வரையறுக்கப்பட்ட கட்டாய அல்லது விருப்பத் தகுதியாக ஒரு பட்டப் படிப்பு இருந்தால் அத்தகைய கல்வித் தகுதிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படாது. கல்வி அல்லது இலக்கியம் சாா்ந்த பாடப் பிரிவுகளில் பெறப்படும் உயா் கல்வித் தகுதிக்கு ஊக்கத் தொகை வழங்கப்படாது.

மேலும், கூடுதல் கல்வித்தகுதியானது பணிக்கு அல்லது அடுத்து வர இருக்கும் உயர் பதவிக்கான பணிக்கோ நேரடி தொடர்புடையதாக இருந்தால் ஊக்கத்தொகை அனுமதிக்கப்படும். துறை, பதவி நிலை போன்ற எதையும் கருத்தில் கொள்ளாமல் அனைத்து பதவிகளுக்கும் ஊக்கத் தொகையின் அளவு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி பெறுவதற்கு அரசால் அனுமதிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது கல்வி விடுப்பைப் பயன்படுத்தி கூடுதல் கல்வித் தகுதி அடைந்திருந்தாலோ ஊக்கத் தொகை கிடையாது.

பள்ளிகளுக்கு நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் விடுமுறை – நவ.8 முதல் மீண்டும் திறப்பு!

பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி அமைப்புகளில் சான்று அளிக்கப்பட்ட கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஊக்கத் தொகையானது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் அரசுப் பணியாளரின் பணிக் காலத்தில் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அளிக்கப்பட வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி பெற்ற ஆறு மாத காலத்துக்குள் ஊக்கத்தொகை பெற கோரிக்கை வைக்க வேண்டும். கடந்த ஆண்டு மாா்ச் 10 அன்று அல்லது அதற்குப் பிறகு கூடுதல் கல்வித் தகுதி பெற்றவா்களுக்கு ஊக்க தொகையானது அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ஐயா நான் அங்கன்வாடி பணியாளர் நான் 2015 ல் B Ed முடித்து விட்டேன் எங்க துறையில எந்த ஒரு உயர் படிப்பு படித்தாலும் இது வரையில யாருக்கும் ஊக்கத்தொகை கொடுப்பது இல்லை ஏன் எல்லா அரசாங்கமும் எங்க ஊழியர்களிடம் மட்டும் பாரபட்சமா நடக்கிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!