சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் – ஏர் விமான நிறுவனம் தகவல்!

0
சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் - ஏர் விமான நிறுவனம் தகவல்!
சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் - ஏர் விமான நிறுவனம் தகவல்!
சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் – ஏர் விமான நிறுவனம் தகவல்!

சென்னையில் தற்போது தினமும் 9 விமானங்களும், பெங்களூரிலிருந்து சென்னைக்கு 9 விமானங்களுமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆகாசா ஏர் விமானம் கூடுதலாக இயக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

விமான சேவைகள்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்பு பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் வழக்கம் போல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அக்டோபர் மாதம் முதல் WhatsApp பயன்படுத்த தடை? ஷாக் அறிவிப்பு!

இந்த நிலையில் ஆகாசா ஏர் விமான நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு புதிய விமான சேவைகளை தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் தற்போது சென்னையை மையமாக கொண்டு விமான சேவைகளை தொடங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை சென்னையிலிருந்து 9 விமானங்கள் பெங்களூரில் இருந்தும் மற்றும் பெங்களூரில் இருந்து 9 விமானங்களும் அதன்படி நாள் ஒன்றுக்கு 18 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது விமானங்களை அதிகளவில் இயக்க இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது வருகிற 26ம் தேதி முதல் சென்னையில் இருந்து கொச்சிக்கும், கொச்சியில் இருந்து சென்னைக்கும் புதிய விமானங்களை இயக்க உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை சென்னை கொச்சி இடையே நாள் ஒன்றுக்கு 4 விமானங்கள் புறப்படும், 4 விமானங்கள் வருகை புரியும். அதன்படி தினமும் 8 விமான சேவைகள் இயங்குவதாகவும் இதனை இனிமேல் 10 விமான சேவைகளாக அதிகரிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதே போல் சென்னையில் இருந்து மைசூருக்கும் புதிய விமான சேவைகளை இயக்க உள்ளது. மேலும் இந்த விமானங்கள் ஞாயிறு, புதன், மற்றும் வெள்ளி உள்ளிட்ட 3 தினங்களில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here