PhonePe, Paytm மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்ய கூடுதல் கட்டணம் – பயனர்கள் புகார்! நிறுவனம் விளக்கம்!

0
PhonePe, Paytm மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்ய கூடுதல் கட்டணம் - பயனர்கள் புகார்! நிறுவனம் விளக்கம்!
PhonePe, Paytm மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்ய கூடுதல் கட்டணம் - பயனர்கள் புகார்! நிறுவனம் விளக்கம்!
PhonePe, Paytm மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்ய கூடுதல் கட்டணம் – பயனர்கள் புகார்! நிறுவனம் விளக்கம்!

இந்தியாவில் PhonePe மற்றும் Paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் போன் ரீசார்ஜ் செய்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக பயனர்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் கூறினர். இது குறித்து நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது

கூடுதல் கட்டணம்:

இந்தியாவில் தற்போது அதிக அளவு பண பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் வங்கிகள் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளதால் பகுதி நேரமாக வங்கிகள் இயக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் வங்கிகளால் கூட்டத்தை தவிர்க்க வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதன் வாடிக்கையாளர்கள் முடிந்த அளவு வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்து வங்கியின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வலியுறுத்தியது.

தமிழ்நாடு வழக்குத் துறையில் வேலைவாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்! விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!

அதன்படி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மற்றும் PhonePe, Paytm, google pay போன்ற செயலிகள் மூலம் பணம் அனுப்புதல், போன் ரீசார்ஜ் செய்தல், டிக்கெட் முன்பதிவு, ஆன்லைன் ஷாப்பிங் போன்றவைகள் UPI செயலிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் PhonePe மற்றும் Paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்தால் அதிக கட்டண வசூலிப்பதாக புகார்கள் எழுந்து எழுந்து வருகிறது. கடந்த மார்ச் முதல் மேலும் கட்டணம் அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியானதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்த Paytm நிறுவனம் 100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. இது நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும் கூறியுள்ளது. மேலும் PhonePe 50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தாலே கட்டணம் வசூலிக்கிறது. இது போன்ற கட்டணங்களை தவிர்க்க பொதுமக்கள் நீங்கள் எந்த எந்த சிம் பயன்படுத்துகிறீர்களா அந்த நெட்வொர்க் நிறுவனத்தின் ரீசார்ஜ் செயலியை பயன்படுத்துவது நல்லது. இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here