செப்.,30 வரை வாகன ஆவணங்களை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- மத்திய அரசு அறிவிப்பு!

0
செப்.,30 வரை வாகன ஆவணங்களை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- மத்திய அரசு அறிவிப்பு!
செப்.,30 வரை வாகன ஆவணங்களை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- மத்திய அரசு அறிவிப்பு!
செப்.,30 வரை வாகன ஆவணங்களை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- மத்திய அரசு அறிவிப்பு!

வாகன ஓட்டுநர் உரிமம், வாகன உரிமை ஆவணம் போன்றவற்றுடன் கனரக வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்த காரணத்தால் ஓட்டுநர் உரிமம், ஆர்சி, பிட்ன்ஸ் சர்டிபிகேட் போன்ற மோட்டார் வாகனங்கள் தேவையான அனைத்து ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை கடத்த 2020 பிப்ரவரி முதல் நீட்டித்தது. இதுவரை தொடர்ந்து ஆறு முறை ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டது. இதற்கு முன்னர் ஜூன் 30ம் தேதி வரை இந்த ஆவணங்கள் செல்லுபடியாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்தது.

தமிழக ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு – அரசு உத்தரவு!

இது தொடர்பாக மத்திய அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ் (ஆர்.சி), பிட்னஸ் சான்றிதழ் உள்ளிட்ட பிற மோட்டார் வாகன ஆவணங்கள் அனைத்தும் செப்டம்பர் 30ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது. இதேபோல், அனைத்து கனரக வாகனங்களின் தகுதி சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் புதுப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதில், 7,000 கிலோ வரை எடை உள்ள இலக்கு ரக வாகனங்களுக்கு ரூ.300 பதிவு கட்டணமாகவும், 7,000 முதல் 12,000 கிலோ வரை எடை உள்ள மத்திய ரக வாகனங்களை ரூ.400 பதிவு கட்டணமாகவும், 12,000 கிலோக்கும் அதிகமாக எடை உள்ள வாகனங்கள் கனரக வாகனங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றை புதுப்பிக்கும் போது, ஒளி விளக்கு, பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள், பிரேக் உள்ளிட்ட உதிரி பாகங்களும் மாற்றியமைக்கப்படுகிறது. அனைத்து கனரக வாகனங்களையும் புதுப்பிக்க செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!