தற்காலிக மருத்துவ பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

0
தற்காலிக மருத்துவ பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
தற்காலிக மருத்துவ பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
தற்காலிக மருத்துவ பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோனா தடுப்பு பிரிவில் பணியாற்றிய தற்காலிக மருத்துவ பணியாளர்கள் பணி நீட்டிப்பு மற்றும் ஊதிய நிலுவையை செலுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

பணி நீட்டிப்பு:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவத் தொடங்கி, ஏப்ரல் இறுதியில் மற்றும் மே மாத ஆரம்பத்தில் தினசரி தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகியது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காகவும் அரசு மருத்துவ பணியாளர்களை அதிக அளவில் நியமித்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க வேண்டும் – WHO தலைமை விஞ்ஞானி!

அதிக அளவில் மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்த பின்னர் அனைத்து நோயாளிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் நோய் தொற்று கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் பணியாற்றிய தற்காலிக மருத்துவ பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த போது, மருத்துவ பணிகளுக்காக தொகுப்பூதியத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ உதவி பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டோம்.

TN Job “FB  Group” Join Now

ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு, தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளோம். முன்னதாக இருந்த தனியார் மருத்துவமனை பணியினையும் இதற்காக தவறவிட்டுள்ளோம். மேலும், எங்களுக்கு இரண்டு மாத ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கவில்லை. எனவே இரண்டு மாத நிலுவைத் தொகை மற்றும் பணி நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here