ஆகஸ்ட் 20 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – புதுவை பல்கலை அறிவிப்பு!

0
ஆகஸ்ட் 20 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - புதுவை பல்கலை அறிவிப்பு!
ஆகஸ்ட் 20 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - புதுவை பல்கலை அறிவிப்பு!
ஆகஸ்ட் 20 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – புதுவை பல்கலை அறிவிப்பு!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலை, பிஎச்டி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுவை பல்கலைக்கழகம்:

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு படிப்புகள், பிஎச்டி, முதுநிலை பட்டயப் படிப்பு, வணிகம், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. புதிய கல்வியாண்டு தொடங்கியது முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பல்கலைக்கழகம் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம்.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – வாடிக்கையாளர்கள் விபரங்கள் சேகரிப்பு தீவிரம்!

நடப்பு கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுகலை, பிஎச்டி ஆகிய படிப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 14 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் பிஎச்டி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று இணையதளத்தில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு முறை அதற்கு விண்ணப்பிப்பது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய www.pondiuni.edu.in என்ற பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!