தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் நீட்டிப்பு – இயல்பு நிலைக்கு திரும்பும் மாநிலம்!

1
தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் நீட்டிப்பு - இயல்பு நிலைக்கு திரும்பும் மாநிலம்!
தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் நீட்டிப்பு - இயல்பு நிலைக்கு திரும்பும் மாநிலம்!
தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் நீட்டிப்பு – இயல்பு நிலைக்கு திரும்பும் மாநிலம்!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற ஜூலை 5ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார். தற்போது தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்து உள்ளதால் மாநிலம் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

கூடுதல் தளர்வுகள்:

தமிழகத்தில் நேற்று (ஜூன் 28) காலை 6 மணி முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றபடி தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வகை 3ல் இடம் பெற்றிருக்கும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், தனியார் அலுவலகங்கள் என அனைத்தும் இயங்கி வருகிறது.

WhatsApp வழியாக பணபரிமாற்றம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

இதனால் சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மேலும் தங்கள் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பணியாளர்கள் திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை நுழைவு பகுதியான செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வாகனங்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. மேலும் சென்னையில் உள்ள பூந்தமல்லி, அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் வகை 2 ல் இடம்பெற்றுள்ள மாவட்டங்களில் அதிக அளவிலான பேருந்து சேவைகள் இயங்கி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் தற்போது உடற்பயிற்சி கூடங்கள் இயங்க தொடங்கியுள்ளது. இதனால் இளைஞர்கள் உற்சாகத்துடன் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று வருகின்றனர். அதேபோல் வகை 1ல் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களில் தற்போது சலூன் கடைகள் உள்ளிட்ட பல கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் ஏகப்பட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. sir, the new built Anna Salai road ‘secretariate ‘building tobe covered in your next…photographs adjacent to lic building…a qualification to a state to be.the State..originally owned to bringing to the public attention…sentriduveer ettuthikkum kalai selvangal yaavum konrnthingu cherppeer…dreams of Bharathi, poet.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!