தமிழகத்தில் முழு ஊரடங்கு ஜூன் 21க்கு பின் நீட்டிப்பு? விரைவில் அறிவிப்பு!

2
தமிழகத்தில் முழு ஊரடங்கு ஜூன் 21க்கு பின் நீட்டிப்பு? விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் முழு ஊரடங்கு ஜூன் 21க்கு பின் நீட்டிப்பு? விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் முழு ஊரடங்கு ஜூன் 21க்கு பின் நீட்டிப்பு? விரைவில் அறிவிப்பு!

தமிழகத்தில் ஜூன் 21ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கூடுதல் தளர்வுகள் உடன் நீட்டிப்பது பற்றி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியதால் கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் முன்னர் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இ-பதிவு செய்து மக்கள் வெளியில் சென்று வர அனுமதியும் வழங்கப்பட்டது. இந்த சலுகைகை மக்கள் முறையாக பயன்படுத்தாமல் அலட்சியப்படுத்திய காரணத்தால் தொற்று பரவல் மேலும் அதிகரிக்க தொடங்கியது.

கொரோனா 3ம் அலையில் மீண்டும் கடுமையான ஊரடங்கு? மாநில அரசு எச்சரிக்கை!

இதனால் இரண்டாம் கட்டமாக மே 24ம் தேதி முதல் தொடர்ந்து 14 நாட்களாக தளர்வுகளற்ற தீவிர ஊரடங்கு அமலில் இருந்தது. தீவிர ஊரடங்கின் விளைவால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைய தொடங்கியது. இதனால் ஜூன் 7ம் தேதி முதல் மாநிலத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இருப்பினும் 11 மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிக அளவில் பதிவாகி வருகிறது. இந்த மாவட்டங்களில் மட்டும் இதுவரையிலும் குறைந்த அளவிலான தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

தற்போது ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. அதன்பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை உயர் அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்த உள்ளார். பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் பேருந்து சேவை, துணிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவை செயல்பட அனுமதி அளிக்கப்பட இருப்பதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றன. பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களில் குறைவான தளர்வுகள் அளிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. # People should follow COVID restrictions voluntarily, to save their lives, their near and dear, and the society at large ! Pandemic, the various types of fungus are not going to end in the near future ! We have to learn to survive with all these problems !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!