தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிப்பு – மார்ச் 1 வரை கால அவகாசம்!

0
தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிப்பு - மார்ச் 1 வரை கால அவகாசம்!
தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிப்பு - மார்ச் 1 வரை கால அவகாசம்!
தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிப்பு – மார்ச் 1 வரை கால அவகாசம்!

தமிழகத்தில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தற்போது கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழகத்தில் அரசு பணிகளில் சேர விரும்புபவர்கள் தங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியம். கடந்த காலங்களில் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்வார்கள். தற்போது 10, 12ம் வகுப்பு முடித்தவுடன் அந்தந்த பள்ளிகள் மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு இந்த வேலை வாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பு செய்வது அவசியமாகும். இதன் மூலம் அரசு பணிகளால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் – புலம்பும் தொண்டர்கள்!

தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் சிரமப்படும் மக்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பை பதிவு செய்தும் அதனை தொடர்ந்து புதுபித்து 5 ஆண்டுகள் முடிவடைந்தவர்களுக்கு அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2014 முதல் 2019ம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையாக 3 மாத அரசு கால அவகாசம் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத் தொகை? விரைவில் அறிவிப்பு!

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 1.3.2022 க்குள் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பித்து கொள்ளலாம். இணையதளம் வாயிலாகவோ, பதிவஞ்சல் வாயிலாக நேரடியாகவோ சென்று புதுப்பித்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!