தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி எந்தெந்த வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி எந்தெந்த வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி எந்தெந்த வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி எந்தெந்த வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? அமைச்சர் விளக்கம்!

வரவிருக்கும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் நர்சரி வகுப்புகள் துவங்கும் என்று தவறுதலாக வெளிவந்த அறிவிப்புக்கு விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், அடுத்த மாதம் முதல் 1 லிருந்து 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் தொடர்ச்சியாக சரிந்து வரும் கொரோனா பேரலை தொற்றுக்கு மத்தியில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி துவங்கி 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்தியில், நவம்பர் 1ம் தேதி நர்சரி வகுப்புகளுக்கும் பள்ளிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவம்பரில் பணியிட மாறுதல் கலந்தாய்வு!

ஆனால் இந்த அறிவிப்பு தவறுதலாக வெளியானது என அரசு தரப்பில் இருந்து மறுவிளக்கம் கொடுக்கப்பட்டது. தற்போது மீண்டுமாக தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் 1 லிருந்து 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, பள்ளி மாணவர்கள் கொரோனா பேரலை காலத்தில் இழந்த கல்வியை மேம்படுத்தும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘பள்ளிக்கல்வித்துறையின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டமானது தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மையங்களுக்கு அனுப்ப வேண்டும். அங்கு 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற வீதத்தில் கற்றல் வகுப்புகள் மேற்கொள்ளப்படும்.

TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021 – வயது வரம்பு நீட்டிப்பு! அரசாணை வெளியீடு!

கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு சுமார் 17 லட்சம் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். இப்போது 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு கற்பிக்க தன்னார்வலர்கள் 12ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. அந்த வகையில் முதல் கட்டமாக திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த சேவைகள் தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இதற்காக சுமார் ரூ.200 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாடங்களை கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கு ரூ.1,000 ஊக்க தொகை வழங்கவும் ஆலோசித்து வருகிறோம். தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தொற்றுக்கு பிறகு பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. அதனால் இந்த இல்லம் தேடி கல்வி திட்டம் 1 முதல் 5 ம் வகுப்பு வரையும், 6 முதல் 8ம் வகுப்பு வரையும் இரண்டு குழுக்களாக நடத்தப்பட உள்ளது.

ஹேமாவிடம் உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா, தடுக்க வரும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

இப்போது இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிய விரும்புபவர்கள் தங்களளை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் இணைத்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் தற்போது வரை நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யவில்லை. என்றாலும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்த பிறகு இந்த வகுப்புகளை துவங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். எனினும் வரும் நவம்பர் மாதத்திலிருந்து 1 முதல் 8 ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here