கொரோனா தடுப்பூசிகளுக்கு காலாவதி காலம் – மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயம்!

0
கொரோனா தடுப்பூசிகளுக்கு காலாவதி காலம் - மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயம்!
கொரோனா தடுப்பூசிகளுக்கு காலாவதி காலம் - மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயம்!
கொரோனா தடுப்பூசிகளுக்கு காலாவதி காலம் – மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயம்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்த நாளில் இருந்து எத்தனை மாதங்கள் பயன்படுத்தலாம் என்பதற்கான காலவரம்பை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசிகள் இரண்டு டோஸ் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

ஜனவரி முதல் ஏடிஎம்களில் கூடுதல் கட்டணம் வசூல் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

அடுத்த கட்டமாக பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்புபின் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து மூன்றாவதாக சைகோவ்-டி தடுப்பூசி அறுமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. தற்போது இந்த 3 கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்த நாளில் இருந்து எத்தனை மாதங்கள் பயன்படுத்தலாம் என்ற காலவரம்பை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நடிகர் கமல்ஹாசன் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

அதன் படி உற்பத்தி செய்யப்பட்ட நாளில் இருந்து கோவாக்சின் தடுப்பூசியை 12 மாதங்களும், கோவிஷீல்டு தடுப்பூசியை 9 மாதங்களும், ஜைகோவ்-டி தடுப்பூசியை 6 மாதங்களும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கொரோனாவில் இருந்து எத்தனை மாதங்கள் தடுப்பூசிகள் நம்மை பாதுகாக்கும் என்பது குறித்து எந்த ஆய்விலும் கண்டறியப்படவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here