தமிழக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வில் விலக்கு – அரசுக்கு கோரிக்கை!

1
தமிழக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வில் விலக்கு - அரசுக்கு கோரிக்கை!
தமிழக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வில் விலக்கு - அரசுக்கு கோரிக்கை!
தமிழக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வில் விலக்கு – அரசுக்கு கோரிக்கை!

ஆசிரியர் தகுதி தேர்வான TET தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள 1500 ஆசிரியர்களுக்கு, இத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என தமிழக அரசின் உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

தேர்வில் விலக்கு

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் 16-11-2012 வரை பணி நியமனம் பெற்ற 1500 ஆசிரியர்கள், தகுதி தேர்வு நிபந்தனையால் பாதிக்கப்பட்டு, கடந்த 11 ஆண்டுகளாக பணி செய்து வருகின்றனர். அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் TET என்ற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு முன்னாகவே இருந்து பணி சேட்டு வரும் ஆசிரியர்கள் அரசுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர்.

மின்சார வாகனம் வாங்கும் நபர்களுக்கு ரூ.20,000 மானியம் – முதல்வர் அறிவிப்பு!

கடந்த 20-08-2010 முதல் 16-11-2012 வரையிலான காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட நிரந்தர பணி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வான TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சில காரணங்களை முன்வைத்து கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதாவது அந்த காலகட்டத்தில் ஆசிரியர் பணி செய்து வந்த, தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டு தகுதித்தேர்வில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

TN Job “FB  Group” Join Now

இந்த தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி இல்லாத காரணத்தால், பதவி உயர்வு, ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளுக்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த சிக்கல்களால் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய மன உளைச்சலுடன் காணப்படும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக அரசின் உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. எனக்கு 54 வயதாகிறது. 2013 மற்றும் 2017 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இதுவரை பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தும் சிலர் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. தமிழக முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!