தமிழகத்தில் உறுதியாக நீட் தேர்வில் விலக்கு? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் உறுதியாக நீட் தேர்வில் விலக்கு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் உறுதியாக நீட் தேர்வில் விலக்கு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் உறுதியாக நீட் தேர்வில் விலக்கு? அமைச்சர் விளக்கம்!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு பல மாநிலங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு விலக்கில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு:

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தமிழகத்திலும் நீட் தேர்வானது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் மருத்துவ படிப்பு கனவுடன் இருக்கும் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 1982-ம் ஆண்டு திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது அந்த கல்லூரியில் 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியானது 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்துள்ளனர்.

திருமங்கலத்தில் புதிய ஹோமியோபதி மருத்துவமனை – அமைச்சர் பேட்டி!

Exams Daily Mobile App Download

அதற்காக ஆய்வு செய்யத் தான் தற்போது வந்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் இங்கு ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும் என தெரிவித்தார். அந்தப் பணிகள் நிறைவடைய 2 ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சிலர் ஆணையாளரை அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசு நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகள் கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!