JOB ALERT..! வேலைவாய்ப்பை தேடும் நபர்கள் கவனத்திற்கு – நவ.17 & 18 நேர்காணல்!
வேலை வாய்ப்பை தேடும் நபர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY நிறுவனம் தற்போது வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. EXAMSDAILY நிறுவனம் அனைத்து விதமான அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடத்தி வருகிறது. பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. மாதிரி வினாத்தாள் தயாரிக்கும் டீமிற்கான காலி இடம் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கான நேர்காணல் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதி மதுரை காளவாசலில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணல் நடைபெறும் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ADDRESS:
Mathy Examsdaily Private Limited
5, Annai therasa St,
Kalavasal,
Madurai,
Tamil Nadu 625016.