அண்ணா பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு – M.E, M.Tech தேர்வுகள் ஒத்திவைப்பு!

0
அண்ணா பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு - M.E, M.Tech தேர்வுகள் ஒத்திவைப்பு!
அண்ணா பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு - M.E, M.Tech தேர்வுகள் ஒத்திவைப்பு!
அண்ணா பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு – M.E, M.Tech தேர்வுகள் ஒத்திவைப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான நேரடித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு ஒத்திவைப்பு:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வை நேரடி முறையில் நடத்துவதில் சிக்கல் எழுந்தது இந்நிலையில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை அறிவுறுத்தியது. மேலும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெற உள்ளது. வாட்ஸ்அப், மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் வழியாக விடைத்தாளை அனுப்ப அறிவுறுத்தபட்டது.

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி எல்லா இடங்களிலும் இலவச உணவு!

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி கடந்த 1ம் தேதி முதல் அறிவியல், கலை, பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான நேரடித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு மார்ச் 9 ஆம் தேதிக்கும் 21 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு மார்ச் 10 ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் வேகமெடுக்கும் ஓமைக்ரான் தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – WHO எச்சரிக்கை!

தொலைதூர தேர்வுகளை தொடர்ந்து நேரடி வகுப்பு மாணவர்களுக்குமான தேர்வு, தேர்தலை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here